சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் சூப்பர் மாற்றம் .. பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் அதிகம்.. மாவட்ட வாரியாக லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களை ஒப்பிடும் போது முதல் முறையாக பாதிக்கப்பட்டவர்களைவிட கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை இன்று அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 3680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முதல் முறையாக பாதிக்கப்பட்டவர்களைவிட அதிகம் பேர் குணம் அடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 4163 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 82324 ஆக உயர்ந்துள்ளது. இது மிக ஆரோக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதைய நிலையில் 46105 பேர் மட்டுமே ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீள அதிக பரிசோதனை, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தமிழக அரசு தீவிரமாக பின்பற்ற வருகிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா.. ஒரு வயது குழந்தை உள்பட 64 பேர் மரணம்!தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா.. ஒரு வயது குழந்தை உள்பட 64 பேர் மரணம்!

 எழுந்து வரும் சென்னை

எழுந்து வரும் சென்னை

சென்னையில் தினமும் கொத்துக்கொத்தாக கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பும் கடுமையாக உயர்ந்து வந்தது. இதனால் தீவிர கவனம் செலுத்திய அரசு, வார்டு வாரியாக சிறப்பு அதிகாரிகளை நியமித்து பணிகளை வேகப்படுத்தியது. ஒவ்வொரு வார்டிலும் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதேபோல் வீடு வீடாக சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. உயிரிழப்பும் கட்டுக்குள் வந்துள்ளது.

 அதிகமாகும் பாதிப்பு

அதிகமாகும் பாதிப்பு

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பை குறைக்க பொதுபோக்குவரத்தை ரத்து செய்த அரசு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் முறையை கொண்டு வந்தது. அத்துடன் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது விரைவாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதனால் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. விரைவில் இங்கு பாதிப்பு குறையும் என தெரிகிறது.

 குணம் அடைந்தவர்கள்

குணம் அடைந்தவர்கள்

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை இன்று அதிகமாக உள்ளது. சென்னையில் இன்று 1205 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 2869 பேர் குணம் அடைந்துள்ளனர். விருதுநகரில் 143 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 140 பேர் குணம் அடைந்துள்ளனர். கடலூரில் 13 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 36 பேர் குணம் அடைந்துள்ளனர். விழுப்புரத்தில் 41 பேர் பாதிக்கப்பட்ட நியில 102 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

திண்டுக்கல்லில் 8 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 26 பேர் குணம் அடைந்துள்ளனர், கிருஷ்ணகிரியில் 2 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் குணம் அடைந்துள்ளனர். மதுரையில் 47 பேரும், புதுக்கோட்டையில் 40 பேரும், செங்கல்பட்டில் 156 பேரும், ராமநாதபுரத்தில் 50 பேரும் திருவள்ளூரில் 145 பேரும், தூத்துக்குடியில் 48 பேரும் குணம் அடைந்துள்ளனர், திருச்சியில் 81 பேரும், வேலூரில் 85 பேரும் இன்று குணம் அடைந்துள்ளனர்.

English summary
Tamil Nadu COVID 19 – District Wise Discharged Case Details (08/07/2020), 4163 COVID-19 positive patients discharged following treatment today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X