சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: ஆசிரியர்களும் பொது ஊழியர் தான் நாட்டின் மீது அக்கறை வேண்டும் - ஹைகோர்ட்

கொரொனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர்களும் பொது ஊழியர் தான் என்றும் அவர்களுக்கும் நாட்டின் மீது அக்கறை இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்களும் இந்த தருணத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், தமிழக அரசு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து தந்துள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனுவில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

Covid duty to teachers as a role model says High Court

ஆசிரியருக்கு போதுமான வசதி செய்து தராமல், குறிப்பாக கவச உடை, மாஸ்க்,கிருமி நாசினி கழிப்பிட வசதி ,தங்குமிட வசதி எந்த ஒரு வசதியும் இல்லாமல் அவர்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும், ஆசிரியர்களை ஆசிரியர் பணி தவிர வேறு பணிக்கு பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆசிரியர்கள் களப்பணிக்கு அனுப்பப்படுவது இல்லை என்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களை கண்காணிப்பு பணிதான் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நேரடியாக களத்திற்கு செல்வதில்லை என்றும் அவர்கள் அலுவலக ரீதியான வேலைதான் பார்ப்பதாக தெரிவித்தார் மேலும் உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றுப் பயிற்சி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.

நெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா நெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியர்களும் பொது ஊழியர் தான் என்றும் அவர்களுக்கும் நாட்டின் மீது அக்கறை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் அவர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் தெரிவித்தனர். தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பெண் காவலர்கள் கூட பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த தருணத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து தந்துள்ளதால் வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Recommended Video

    America-போகவே விருப்பமில்லை, Kerala-தான் வேணும் - 74 Year Old US Citizen

    English summary
    Teachers on pandemic duty can be equated to corona warriors says Madras High Court. A PIL petition has been filed in the Madras High Court to restrain the government from engaging teachers above the age of 50 years in Covid-related duties such as street warriors or tele-counsellors at control rooms, without seeking willingness from them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X