சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் ஆக்ஸ்போர்டு தயாரிப்பு... கோவிஷீல்ட் தடுப்பூசி... மனித பரிசோதனை துவக்கம்!!

Google Oneindia Tamil News

சென்னை:சென்னையில் ஆக்ஸ்போர்டு தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்ட் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் இன்று தொடங்கியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தை தயாரிக்கவும், இரண்டாம், மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடத்துவதற்கும் புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா அனுமதி வழங்கியுள்ளன.

Covishield human trial began in 2 hospital in chennai

இந்த மருந்து தயாரிப்பு பணியில் ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் முதல் இரண்டு கட்ட மனித பரிசோதனைகள் பிரிட்டனில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் பெண் ஒருவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் பரிசோதனை துவங்கி உலகளவில் நடந்து வருகிறது.

இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்!! இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்!!

சென்னையிலும் இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. இந்தப் பரிசோதனையில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 16 இடங்களில் இந்த தடுப்பூசி பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு தேதிகளில் நடந்து வருகிறது.

English summary
Covishield human trials began in Rajiv Gandhi hospital and Porur Ramachandra hospital in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X