சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமேசானில் வறட்டி.. திருப்பூரில் உருண்டை உருண்டையாய் கடை விரித்து விற்பனை செய்யப்படும் சாணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பூரில் உருண்டை உருண்டையாய் கடை விரித்து விற்பனை செய்யப்படும் சாணம்

    சென்னை: கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பொருட்களை போல் மாட்டுச் சாணமும் திருப்பூரில் உள்ள சாலையோரக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது பழைய பாரம்பரிய முறையையும் முன்னோர்களின் வழிப்பாட்டு முறையையும் பிரதிபலிக்கிறது.

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகமே விழாக்கோலமாக பூண்டு வருகிறது. தொழில் நகரான திருப்பூரில் ரோட்டோரங்களில் கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களும், வேப்பிலை பூளைப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்கு வந்து உள்ளன.

    இதில் ஆண்டு தோறும் ஏராளமான கடைகள் முளைத்து கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை அனல் பறக்கும்.

    விற்பனை

    விற்பனை

    இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதலாக மாட்டு சாணியும் விற்பனைக்கு வந்து, ரோட்டோர வியாபாரிகளின் கடைகளில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளது. உருண்டை உருண்டையாய் உருட்டி சாலைகளில் விற்பனைக்காக வைத்து உள்ளனர்.

     மாட்டுச் சாணி கடைகள்

    மாட்டுச் சாணி கடைகள்

    குறிப்பாக திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டு மார்க்கெட், ராயபுரம், மங்களம் ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுச்சாணி கடைகள் முளைத்து உள்ளன. திருப்பூரில் ஒரு உருண்டை மாட்டு சாணி ரூ.10 முதல், 20 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது.

     வெள்ளையடித்த வீடு

    வெள்ளையடித்த வீடு

    இதையும் பொதுமக்கள் ஏராளமான வந்து வாங்கி செல்கிறார்கள். அதுவும் ரோட்டோர வியாபாரிகள் கடைகளில் காட்சிப் பொருளாக வைத்து மாட்டு சாணி விற்கின்றனர். போகிப் பண்டிகை பண்டிகையான நேற்று பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சாணி தெளித்தும் வெள்ளையடித்தும் வேப்பிலை ஆகியவற்றை வைத்தும் கொண்டாடினர்.

     விஞ்ஞான ரீதி

    விஞ்ஞான ரீதி

    பழமை மாறாமல் இருப்பதற்காகவும் விஞ்ஞான ரீதியாகவும் சாணம் போட்டு வீட்டை சுத்தம் செய்தால் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்றும் சாணம் கிருமிநாசினி என்பதாலும் பொதுமக்கள் இந்த ஐதீகத்தை இன்றும் கடைப்பிடிப்பது பெருமைக்குரியதாகும்.

    English summary
    Cow dung is being sold in Thiruppur bus stand in plaform shops ahead of Pongal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X