சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விபத்தில் சிக்கிய கன்று.. 3 கிமீ வண்டியின் பின்னாலேயே ஓடிய தாய்ப்பசு.. கலங்க வைக்கும் வீடியோ

விபத்தில் அடிப்பட்டு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட தனது கன்றுக்குட்டியை தாய் பசு பின்தொடர்ந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: விபத்தில் அடிப்பட்டு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட தனது கன்றுக்குட்டியை தாய் பசு ஒன்று சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை பின்தொடர்ந்து சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்த உலகில் தாய் பாசத்துக்கு ஈடு இணையே இல்லை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும். விலங்குகளில் தாய் பாசத்தை வெளிக்கொணரும் பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

எந்த வாக்கு பெட்டியை திறந்தாலும் உதயசூரியன்தான் உதிக்கணும்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் அன்பு கட்டளைஎந்த வாக்கு பெட்டியை திறந்தாலும் உதயசூரியன்தான் உதிக்கணும்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் அன்பு கட்டளை

Cow follows a calf nearly 3kms which hit by a vehicle

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக உலா வருகிறது. அதில் விபத்தில் அடிப்பட்ட ஒரு கன்றுக்குட்டியை சிலர் ஒரு வண்டியில் வைத்து இழுத்து செல்கின்றனர். அந்த வண்டியை பின் தொடர்ந்து அந்த கன்றுக்குட்டியின் தாய் பசுவும் செல்கிறது.

Cow follows a calf nearly 3kms which hit by a vehicle

சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த தாய் பசு தனது கன்றுக்குட்டியை பின்தொடர்கிறது. சாலையில் சென்றவர்கள் இதனை பார்த்து நெகிழ்ந்து போகிறார்கள். இதனை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் தாய் பசுவின் பாசத்தை நினைத்து மெய்சிலிர்த்து போய் உணர்ச்சி பொங்க கமெண்ட் செய்து வருகிறார்கள். "அந்த வெள்ளை மாடு கர்ப்பமாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். தனது கன்று அடிப்பட்ட உடன் தனது அத்தனை வலியையும் மறந்து பாசத்துடன் அவள் அதன் பின்னால் ஓடுகிறாள்", என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. அந்த மாநிலத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a viral video a cow is following its calf for nearly 3kms which was hit by a vehicle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X