சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. இப்படி ஒரு எளிமையான அரசியல்வாதியா!.. முத்தரசனை பாருங்க!

சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் ஆட்டோவில் வந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக அனைத்து கட்சிக்கூட்டம் : ஆட்டோவில் வந்த முத்தரசன்- வீடியோ

    சென்னை: சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் ஆட்டோவில் வந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடகா தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்த திட்டம் குறித்த வரைவு அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது.மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

    CPI Mutharasan went to DMK meeting in Auto - Photo becomes viral

    இதனால் தற்போது மேகதாது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விவாதிக்கவும், இதனால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆலோசனை செய்யவும் திமுக இன்று எதிர்கட்சிகளுடன் கூட்டம் நடத்தியது.

    மொத்தம் 9 கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது. காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முக்கியமான கட்சிகள் எல்லாம் கூட்டத்தில் கலந்து கொண்டது.

    இந்த நிலையில் இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு அவர் வந்த விதம் பலரை கவர்ந்து இருக்கிறது.

    அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு அவர் ஆட்டோவிலேயே வந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளது. பலரும் அவரின் எளிமையான குணத்தை பாராட்டி வருகிறார்கள்.

    முத்தரசன் ஏற்கனவே இதேபோல் பொது இடங்களில் மக்களோடு மக்களாக இருப்பது, டீ குடிப்பது என்று மிகவும் எளிமையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    CPI Mutharasan went to DMK meeting in Auto - Photo becomes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X