சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசின் 100 நாள் சாதனை என்ன.. முத்தரசன் அறிக்கை!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியை திணிக்க முயன்றால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: முத்தரசன் எச்சரிக்கை

    சென்னை: மோடி பிரதமராக மீண்டும் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிய நிலையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளையும், நீதிபதிகளையும் ராஜினாமா செய்ய வைத்ததே, அவரது சாதனை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

    மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். பொருளாதார மந்தநிலையால் தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எல்லாம் மூடுவிழா நடைபெற்று வருவாதகாவும் இதுவும் மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று என விமர்சித்துள்ளார்.

    cpi state secratery mutharasan statement about modi govt

    கருத்துச்சுதந்திரம் மறுக்கப்படுவதுடன் ஜம்மு காஷ்மீரில் மக்கள் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், பத்து மாதம் சுமந்து பெற்ற தாயைக் காணக்கூட நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

    அடுக்குமொழி, பஞ்ச் டயலாக் மூலம் தமிழில் அசத்திய தமிழிசை.. 15 நாட்களில் என்ன செய்ய போகிறார் தெரியுமா?அடுக்குமொழி, பஞ்ச் டயலாக் மூலம் தமிழில் அசத்திய தமிழிசை.. 15 நாட்களில் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

    காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்களை காவலில் வைத்து பூட்டிவிட்டு தன்னை தானே மோடி அரசு பாராட்டிக்கொள்வதாக சாடியுள்ளார்.

    மத்திய அரசின் போக்கு பிடிக்காமல் மனசாட்சிக்கு மதிப்பளித்து தொடர்ந்து ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும், நீதிபதிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருவதாகவும், அவர்களை ராஜினாமா செய்ய வைத்ததும் மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று என விமர்சித்திருக்கிறார்.

    அதிகாரிகள் ராஜினாமா செய்யும் அபாய நிலையை உணர்ந்து மத்திய பாஜக அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என முத்தரசன் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    English summary
    cpi state secratery mutharasan statement about modi govt
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X