சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்?.. மார்க்சிஸ்ட் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என். ரவியை ராஜ் பவனில் சந்தித்த போது அரசியல் பேசியதாக தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் அரசியலா என விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில் ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் எதனால் வந்தது.

அவர் ஒரு தடவ சொன்னா.. ரஜினி ஒரு வாசகம் பேசினாலும் திருவாசகமாக பேசுவார்! பஞ்ச் பேசிய செல்லூர் ராஜு! அவர் ஒரு தடவ சொன்னா.. ரஜினி ஒரு வாசகம் பேசினாலும் திருவாசகமாக பேசுவார்! பஞ்ச் பேசிய செல்லூர் ராஜு!

அதிகார வரம்பு

அதிகார வரம்பு

அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொள்ளப் போகிறோம்?" "ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை

இதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னதற்கு சமுதாயத்தில் நடைபெறும் விஷயங்களை பேசியதாகத்தான் அர்த்தம். கம்யூனிஸ்ட்காரர்களுக்கு வேலை இல்லாததால் இதனை விமர்சிக்கிறார்கள். திமுக தரும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவர்கள் மூக்கில் வைத்துள்ளனர் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை கொதிப்பது ஏன்

அண்ணாமலை கொதிப்பது ஏன்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஆளுநரை கேள்வியெழுப்பினால்
அண்ணாமலை கொதிப்பது ஏன்? தமிழக ஆளுநரை திரு ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் 'பி' டீம் ஆக இருந்ததில்லை.

பீ டீம்

பீ டீம்

ஆனால், ஆர்.எஸ்.எஸ். தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு 'பீ' டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் 'பீ' டீம் ஆகவும் செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவின் எண்ணம் பகல் கனவாகவே முடியும் என தனது டவிட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
CPM State Secretary Balakrishnan asks Why Annamalai getting angry when we question Governor?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X