ஏன் டெல்லி வரை போயிருக்காங்க.. பிரதமர் என்ன கூட்டணி தலைவரா? அதிமுக தலைவரா?.. சிபிஎம் காட்டம்
சென்னை: "அதிமுக பலவீனம் அடைந்துள்ளது.. இந்த நாட்டின் பிரதமர் கூட்டணி தலைவரா? இல்லை அதிமுக தலைவரா என தெரியவில்லை.. பிரச்சனையை தீர்த்து கொள்ள இவர்கள் டெல்லி வரை சென்றிருக்கிறார்கள்.. அதிமுக ஆட்சியில் நடந்த எல்லா ஊழல்களையும், முறைகேடுகளையும் முழுமையான விசாரிக்க தமிழக அரசு முன் வரவேண்டும்" என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
5 மாதங்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு- இந்தியாவில் 29,689 பேருக்கு தொற்று- 415 பேர் மரணம்
அப்போது அவர் சொன்னதாவது: பாஜக மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. ஒரு நாள் கூட பாக்கி இல்லாமல், அனுதினமும் மக்கள் விரோத மோசமான நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.. அமெரிக்க ஏகாதிபத்திய அரசினை கண்டித்து வரும் 29ம்தேதி சென்னையில், அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டம்
மோடி அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காக்கவும் தொடர்ந்து போராடுவது என தீர்மானித்துள்ளோம்... தமிழகத்தில் நீட் தேர்வை திணிப்பது போன்ற ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.

ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நல்ல பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இனியும் பல நல்ல நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். மக்களின் ஆதரவு பெரும் வகையில் திமுகவின் நடவடிக்கை தொடர வேண்டும். வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்..

கோரிக்கை
அதிமுக தற்போது மக்கள் பிரச்சனைகள் குறித்து அறிக்கை விடுகின்றனர், ஆனால், இந்த கோரிக்கைகளை பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றி இருக்கலாம்... அப்போது கையாளாகாத அரசாக இருந்துவிட்டு, தற்போது மக்கள் பிரச்சனைக்காக போராடுகிறேன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது. அதிமுக கோஷ்டி பிரச்சனை தலைதூக்கி உள்ளது..

பலவீனம்0
இதை தீர்த்துக்கொள்ள டெல்லி வரை சென்றிருக்கிறார்கள்.. அந்தளவுக்கு அதிமுக பலவீனம் அடைந்துள்ளது.. இந்த நாட்டின் பிரதமர் கூட்டணி தலைவரா? இல்லை அதிமுக தலைவரா என தெரியவில்லை.. தமிழகத்தை 10 வருடம் ஆண்ட அதிமுக அரசானது எல்லா வகைகளிலும் மதவெறி பாஜவுக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டு வந்துள்ளது.. எல்லா அனைத்து துறைகளிலும் ஊழலும், முறைகேடுகளும் நீக்கமற நிறைந்திருந்தது... அனைத்து டிரான்ஸ்பர்களும், பணி நியமனங்களும், பண அடிப்படையிலேயே நடந்துள்ளது.

ஓபிஎஸ்
இவர்கள் ஆட்சியிலிருந்த காலத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்து கோர்ட் வரை சென்றது.. எனவே, முந்தைய ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களையும் முறைகேடுகளையும் முழுமையாக விசாரிக்க தமிழக அரசு முன் வரவேண்டும்.. யாரெல்லாம் தவறிழைத்தவர்களோ அவர்களை தண்டிக்கவும் தயங்காமல் முன்வர வேண்டும்.

அணை
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவது முதல், தமிழகத்தின் உரிமையை மீட்பது உள்ளிட்ட தமிழக மக்களின் நலன் காக்க தொடர்ந்து போராடுவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்றார்.