சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் ஏன் போட்டியிடலை.. தொண்டர்கள் அப்செட்.. அழகிரிக்கு பயந்து நடுங்குகிறதா திமுக?

மதுரை தொகுதியில் திமுக போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: உண்மையை சொல்வதானால், அழகிரிக்கு திமுக பயந்து நடுங்குவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

திமுகவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கு 2 தொகுதிகளையும் திமுக ஒதுக்கி உள்ளது. தற்போது 2-ல் ஒரு தொகுதி மதுரைக்கு ஒதுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில், மதுரையை பொறுத்தவரை, காங்கிரஸ் இதுவரை 8 முறை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி 3 முறையும் வென்றுள்ளது. இதனால் இந்த முறை இதே தொகுதியை கேட்கிறதாம் சிபிஎம்.

ஆனால் இந்த 3 முறையும் சிபிஎம் வெற்றி பெற முக்கிய காரணம் மோகன் என்ற வேட்பாளர்தான்.இவர்மீது தனிப்பட்ட முறையில் மக்களுக்கு மரியாதை உண்டு. தன்னலம் பாராமல் உழைத்ததால்தான் மோகனால் மதுரையில் சிபிஎம் சார்பில் வெற்றி பெற முடிந்தது.

 இப்போது அல்ல.. 2012ல் இருந்தே நடந்தது.. 7 வருடமாக பொள்ளாச்சி கும்பல் சிக்காமல் இருந்தது எப்படி? இப்போது அல்ல.. 2012ல் இருந்தே நடந்தது.. 7 வருடமாக பொள்ளாச்சி கும்பல் சிக்காமல் இருந்தது எப்படி?

10 வருஷங்கள்

10 வருஷங்கள்


கடந்த 2009 தேர்தலில் முக அழகிரியை எதிர்த்து போட்டியிட்டார் மோகன். ஆனால் அழகிரியோ 1,40,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். இது நடந்து 10 வருஷம் ஆகிவிட்டது. இப்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகுதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி மதுரை தொகுதியை கேட்டுப் பெறவுள்ளது. அதற்கு திமுக தரப்பும் ஓகோ சொல்லிவிட்டதாம்.

அழகிரி காரணமா?

அழகிரி காரணமா?

இதெல்லாம் சும்மா ஒரு ஒப்புக்கு சப்பாணியாக சொல்லப்படும் காரணமாம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அழகிரிக்கு பயந்துதான் திமுக தன் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சியில் சேர்த்து கொள்ளாத ஆத்திரத்தில் உள்ள அழகிரி, திமுகவை ஒரு தொகுதியிலும் ஜெயிக்க விடமாட்டேன்" என்று கர்ஜித்து வருகிறார். அப்படி இருக்கும்போது மதுரையில் திமுகவை பெவற்றி பெற வைத்துவிடுவாரா என்ன?

அஞ்சாநெஞ்சன்

அஞ்சாநெஞ்சன்

கண்டிப்பாக உள்ளடி வேலைகளில் இறங்குவார் என்று பயந்துதான் திமுக நேரடியாக களமிறங்காமல் கூட்டணியை இறக்கிவிட்டுள்ளதாம். "தைரியம்இருந்தால் எங்கள் அஞ்சாநெஞ்சனை எதிர்த்து ஒரு திமுக வேட்பாளர் மதுரையில்நிற்கட்டும் பார்க்கலாம்" என்று கொக்கரிக்கிறார்களாம் அழகிரி ஆதரவாளர்கள்!

அதிமுக நோ

அதிமுக நோ

இப்படி திமுக ஒரு பக்கம் என்றால், அதற்கு மேல் அதிமுக ஒரு அலப்பறையை கொடுத்து வருகிறதாம். ஏனெனில் மதுரையை பாஜக கேட்டு வரும்நிலையில் அதற்கு அதிமுக எடுத்த எடுப்பிலேயே நோ சொல்லிவிட்டதாம். இதற்கு காரணம், எப்படியோ மதுரையில் திமுக களம் இறங்கவில்லை, என்பதால் இது தங்களுக்கு சாதகமான விஷயமாக அமையும் என அதிமுக யோசிக்கிறதாம்.

சாதகமான முடிவு

சாதகமான முடிவு

பலமான வேட்பாளர் மதுரைக்கு இல்லை என்பதால், ரொம்பவும் ஈஸியாக ஜெயிக்க கூடிய தொகுதியாக இப்போது அதிமுகவுக்கு தென்படுகிறது. அதனால்தான் அந்த தொகுதியில் தாங்களே நின்று வெற்றிபெற திட்டமிட்டு வருகிறது. திமுக இப்படி பயந்து சிபிஎம் வேட்பாளரை நிறுத்துவது அதிமுகவுக்கு ரொம்பவும் சாதமாகிவிட்டதால், பாதி வெற்றி கிடைத்தமாதிரி என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்!

English summary
It is said that DMK wont contests in Madurai Constitution because of MK Azhagiri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X