சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு.. பிச்சை எடுக்கிறோம்.. அதிரடியில் இறங்கிய சிங்கிள் சிங்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வேளாண் மசோதாவை எதிர்த்து சிபிஎம் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தனி ஒருவராக களத்தில் இறங்கிய நபர் ஒருவர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து வைத்தார்.

சென்னையில் வேளாண் மசோதாவை எதிர்த்து சிபிஎம் கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமைச் செயலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர்கள் போலீசாரை மீறி தலைமைச் செயலகம் செல்ல முயற்சித்தனர்.

CPM Protest in Chennai: unorganised sector workers didnt receive pension from the govt

அப்போது மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கார்ப்பரேட்களுக்கு மோடி துணை போவதாக கண்டனம் தெரிவித்தனர். வேளாண் மசோதாக்களை கண்டித்து, 144 தடை உத்தரவையும் மீறி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

நாகையில் செய்தியாளர்களுக்கு அளித்து இருந்த பேட்டியில், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்களால் விவசாயிகளுக்கு நிறைய பயன் இருக்கிறது என்று பிரதமர் மோடி பொய் கூறுகிறார். அதேபோல, மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், முதல்வர் பழனிசாமி கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து வருகிறார். இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே விவசாயியாக முதல்வர் பழனிசாமி இருக்கிறார்.

CPM Protest in Chennai: unorganised sector workers didnt receive pension from the govt

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து, கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையும் மீறி தொடர் போராட்டம் நடத்தப்படும். கும்பகோணத்தில் செப்.29-ம் தேதி நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்'' என்றார்.

இரவு 8 மணிக்கு பிரதமர் வரும்போதெல்லாம், கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன் இரவு 8 மணிக்கு பிரதமர் வரும்போதெல்லாம், கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன்

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அங்கு வந்த நபர் ஒருவர், போலீசாரைப் பார்த்து, ''அமைப்புசாரா தொழிளார்களுக்கு கடந்த ஓராண்டாக பென்ஷன் வழங்கப்படவில்லை. சாப்பாடு இல்லைங்க, சாப்பாட்டுக்கு நாங்கள் பிச்சை எடுக்கிறோம்'' என்றார்.

English summary
CPM Protest in Chennai: unorganised sector workers didn't receive pension from the govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X