சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவை கழற்றிவிடுகிறோம்-.காங்.க்கு குட்பை சொல்லுங்க-திமுகவுக்கு சிக்னல் கொடுத்தது சிபிஆர். பேட்டி?

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது திமுக கழற்றிவிட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற நெருக்கடியை பாஜக அதிகரித்து கொண்டே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் பாஜகவின் முதல் அஜெண்டா. இதற்காக அத்தனைவிதமான வியூகங்களையும் வகுத்து அரங்கேற்றி வருகிறது டெல்லி.

பாஜகவுடன் இணக்கம் - திமுக பாலி

பாஜகவுடன் இணக்கம் - திமுக பாலி

திமுக மீதான இமேஜை சல்லி சல்லியாக நொறுக்கி மக்களிடத்தில் இருந்து அன்னியப்படுத்திவிட வேண்டும் என்கிற வேலையும் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் திமுகவும் டெல்லியுடன் இணக்கமாகப் போவதற்கான லாபிகளில் மும்முரமாக இருந்து வருகிறதாம்.

திமுகவுக்கு பாஜக சிக்னல்?

திமுகவுக்கு பாஜக சிக்னல்?

திமுகவின் இந்த முயற்சிகளுக்கு லேசான சிக்னல்களும் வரத் தொடங்கி இருக்கின்றனவாம். ஆனால் திமுகவிடம் டெல்லி விரும்புவது காங்கிரஸை கழற்றிவிடுங்க என்பதுதான். இதை ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு சிரமம் எதுவும் இல்லை; தொகுதி உடன்பாடு வரும்போது காங்கிரஸ் தானாகவே வெளியேறிவிடும் என்கிற நிலைதான் உள்ளது என திமுக தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

பாஜகவுக்கு திமுக நிபந்தனை

பாஜகவுக்கு திமுக நிபந்தனை

மேலும் காங்கிரஸை நாங்கள் கழற்றிவிடுவது போல அதிமுகவிடம் இருந்து பாஜகவும் விலகினால் சரியாக வரும் என ஒரு கருத்து திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. திமுகவைப் போல இதற்கும் பதிலை பட்டென கொடுத்திருக்கிறது பாஜக. அதிமுகவின் அத்தனை விவகாரங்களும் எங்கள் பிடியில் இருக்கிறது.. எங்களிடம்தான் அவர்கள் சிக்கி இருக்கிறார்கள்.. அதை பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம் என பரஸ்பரம் கூறப்பட்டதாம்.

திமுகவுக்காக சிபிஆர் பேட்டி?

திமுகவுக்காக சிபிஆர் பேட்டி?

இந்த நிலையில்தான் சட்டசபை தேர்தலில் அதிமுக அணி படுதோல்வி அடையும் என்று பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார். சி.பி.ஆரின் இந்த பேட்டி என்பதே திமுகவுக்கு கொடுக்கப்பட்ட சிக்னல்தான்.. அதாவது நீங்க சொன்னதை நாங்கள் செய்கிறோம்.. நாங்க சொன்னபடி காங்கிரஸை கழற்றிவிடுங்க என்பதற்காகவே இந்த பேட்டி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

English summary
Sources said that BJP May break its tie up with AIADMK for TamilNadu Assembly Elections 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X