சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் எப்படி இருக்கு.. குழந்தைகளிடம் கேளுங்கள்.. 'ஒன்இந்தியாவுக்கு' அனுப்புங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: 21 நாட்கள் லாக்டவுன்.. ஓடவும் முடியாமல், ஒதுங்கவும் முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கடுப்பாகிப்போய் இருப்பீர்கள். உங்களுக்கே இப்படி என்றால், துள்ளித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நாலு சுவற்றுக்குள் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்?

கஷ்டமாகத்தான் இருக்கிறது.. ஆனால் வேறு வழி இல்லையே.. என்னதான் செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்குத்தான், வழியமைத்து தருகிறது உங்கள் அபிமான, 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம்.

CreativeKids: Parents can send your children opinion on LockDown

இப்போதைய அவசர தேவை, குழந்தைகளை மனம் விட்டு பேச வைப்பதுதான். அதைச் செய்யுங்கள். அவர்கள் இப்படி வீட்டுக்குள்ளேயே இருப்பதை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கேளுங்கள்.

எல்லா குழந்தைகளும், போர் அடிக்குதுப்பா.. என்று சொல்வார்கள் என எதிர்பார்த்துவிடாதீர்கள். அவர்கள் பதில் ஆச்சரியமளிப்பதாக கூட இருக்கலாம். அவர்கள் என்ன நினைப்பதாக சொல்கிறார்களோ, அதை அப்படியே எங்களுக்கு எழுதியனுப்புங்கள். வார்த்தையால் மட்டுமல்ல, அது ஓவியத்தின் வடிவத்திலோ, கட்டுரையாகவோ, கடிதமாகவோ, பிளேகார்டாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

உங்கள் இ-மெயில்களை [email protected] இந்த முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் படைப்புகளை எளிதாக அடையாளம் காண வசதியாக, #IndiaUnderLockDown #CreativeKids என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துங்கள். வாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கு உலகத்தின் வாயிலை திறந்து வைப்போம்!

English summary
Dear parents, send your children drawing, essay, letter, placard or any such things to Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X