சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுபோதையில் நடக்கும் குற்றங்கள்.. அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... நீதிபதிகள் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை : மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து, ஏப்ரல் 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Crimes in alcoholism; Why the Government should not be responsible: Judges question

மேலும், தமிழக பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளின் அவலம்.. அசுத்த ரத்தம் ஏற்றி 15 கர்ப்பிணிகள் பலி? ஆய்வுக்கு குழு அமைப்பு தமிழக அரசு மருத்துவமனைகளின் அவலம்.. அசுத்த ரத்தம் ஏற்றி 15 கர்ப்பிணிகள் பலி? ஆய்வுக்கு குழு அமைப்பு

முன்னதாக, தமிழகத்தில் மது விற்கப்படுவோருக்கான வயது வரம்பை 21-ல் இருந்து 25 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா, மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மது விற்கப்படுவோரின் வயது வரம்பு 25ஆக உள்ளது என்றும்

அந்த மாநிலங்களில் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Major State Income is sold by alcohol; unfortunate says judges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X