சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உஷா இருக்கிறாரே, போலீஸை பார்த்ததுமே.. கடகடவென டிரஸ்ஸை கழட்டி.. இப்போ ஆஸ்பத்திரியில்!

சென்னையில் மது விற்ற பெண் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: இந்த உஷா இருக்கிறாரே, போலீஸ்காரங்களை பார்த்ததுமே கடகடவென டிரஸ்ஸை கழட்ட ஆரம்பித்துவிடுவாராம்.. வடிவேலு படத்தில் ஒரு சீன் வருமே.. அதே மாதிரிதான்..!

யார் இந்த உஷா..? பெண்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தவரோ, மக்கள் நலனுக்காக சிறை சென்றவரோ இல்லை.. இவர் ஒரு பக்கா கிரிமினல்.. சென்னை ரவுடி.. சாராயம் காய்ச்சி விற்பவர்.. அப்படிப்பட்ட உஷா இப்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கிறார்..!

நாராயணசாமியை எதிர்த்து போட்டி... நமச்சிவாயம் ஆவேச பேட்டி நாராயணசாமியை எதிர்த்து போட்டி... நமச்சிவாயம் ஆவேச பேட்டி

சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்.. 42 வயசாகிறது.. இவரது மனைவிதான் உஷா.. 38 வயதாகிறது.. ரத்தினத்தை தெரியாத போலீஸ்காரர்களே இல்லை, அந்த ஏரியா ஃபேமஸ் ரவுடி அவர்.. சாஸ்திரி நகர் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு வருகிறார்.. இப்போதைக்கு 20 கேஸ்கள் ரத்தினம் மீது மட்டும் உள்ளன. ரத்தினத்துக்கு அத்தனை பலமும் உஷாதான்..!

 சரக்கு

சரக்கு

இந்நிலையில், நைட் நேரங்களில் ஓடைமாநகர் பகுதியில் டாஸ்மாக் சரக்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக, அதே சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது... போலீசாரும் இது ரத்தினம் வேலையாகத்தான் என்று கருதி, அந்த பகுதிக்கு இரவு 8.30 மணி வாக்கில் சென்றனர்.. அங்கு உஷாவும், ரத்தினமும் இருந்தனர்.. இவர்களது மகன் கார்த்தி, அவரது அக்கா, மேலும் சில சொந்தக்கார்களும் அங்கே உட்கார்ந்திருந்தனர். அங்கிருந்தோருக்கு, உஷா சரக்கை டம்ளர்களில் ஊற்றி தந்து கொண்டிருந்தார்.

 ரத்தினம்

ரத்தினம்

போலீசாரை பார்த்ததுமே உஷாவும், ரத்தினமும் கையில் இருந்த சரக்கு டம்பர்களை அப்படி அப்படியே போட்டு விட்டு வீட்டுக்குள் ஓடியுள்ளனர்... ரத்தினத்தை முதலில் பிடிப்பதற்காக போலீசார் வீட்டுக்குள் போலீசார் நுழைய முயன்றனர்.. இதை பார்த்த உஷா, கணவரை போலீசார் கைது செய்துவிடக்கூடாது என்று, கடகடவென தன்னுடைய டிரஸ்ஸை கழட்டி வீசினார்.. எப்போதுமே உஷா இப்படித்தான் செய்வாராம்..

டிரஸ்

டிரஸ்

ஒவ்வொரு முறையும் கைது நடவடிக்கை என்றாலே உஷா வேகமாக டிரஸ்ஸை கழட்டி வீச ஆரம்பித்துவிடுவார்.. இப்போதும் அப்படியே செய்தார்.. இதனால் போலீசார் திகைத்து நின்றனர்.. ஆனால், உஷா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனக்குத்தானே உடம்பில் ஊற்றி கொண்டார்.. தீப்பெட்டியையும் கொளுத்தி கொண்டார்.. தற்கொலை செய்ய போவதாக மிரட்டவும், போலீசார் அப்படியே ஒருசெகண்ட் பின்வாங்கினர்.. அப்போதுதான் உஷாவின் உடம்பில் தவறுதலாக தீப்பிடித்து கொண்டது.

சிகிச்சை

சிகிச்சை

இதனால் அதிர்ந்து போன போலீசார் உடனடியாக உஷா மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.. அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இப்போது உஷாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. மேலும் 5 பிரிவுகளின் கீழ் உஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால், ரத்தினத்தை காணோம்.. எஸ்கேப் ஆகி உள்ள அவரை தேடி வருகிறார்கள்.

 போதை பொருள்

போதை பொருள்

இந்த தம்பதி எப்போதுமே இந்த தொழிலைதான் அதே பகுதியில் செய்து வருகிறார்களாம்.. சில சமயம், பிராந்திக்கு பதிலாக வேறு ஏதோ போதைப்பொருளைக்கூட கஸ்டமர்களுக்கு கலந்து தந்து விடுவார்களாம்.. அந்த சரக்குக்கு எக்ஸ்ட்ரா 150 ரூபாய் வாங்குவார்களாம்.. அந்த சரக்கை குடித்தால், உயிருக்கு ஆபத்தை தரக்கூடியது என்கிறார்கள்.. ஒவ்வொரு முறையும் போலீசார் பிடிக்க வரும் போதெல்லாம் டிரஸ்ஸை களைந்துவிட்டு, நிர்வாணமாக ஓடுவாராம் உஷா.. நேற்று மட்டும், அப்படி ஓடியிருந்தால், உஷா குடியிருக்கும் பகுதிகளில் உள்ள குடிசைகள் தீப்பிடித்து எரிந்திருக்குமாம்...!

English summary
Criminal woman commits suicide in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X