சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காற்று வாங்க மெரினாவில் கூடிய கூட்டம்.. திருப்பிய அனுப்பிய போலீஸ்.. மக்கள் திடீர் யூடர்ன்

Google Oneindia Tamil News

சென்னை: ஞாயிறு ஊரடங்கு இல்லை என்பதால் ஆசையாக பலரும் இன்று சென்னை மெரினா கடற்கரைக்கு குவிந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடை உள்ளதை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பினர். இதனால் அங்கிருந்து பலர் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிக்கு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கும் சென்று மக்களை திருப்பி அனுப்பினர்.

Recommended Video

    சென்னையா இது.. லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் சன்டேயே மிக மோசம்! - அதிர்ச்சி தரும் வீடியோ

    ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக ஞாயிறு அன்று ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. பேருந்துகளும் இயங்கி இயல்பு நிலை சென்னையில் திரும்பியுள்ளது.

    மக்கள் ஆர்வமுடன் கறிகடைகளிலும், மீன் கடைகளிலும் குவிந்தனர். ஆனால் பலரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை மறந்து விரும்பியதை வாங்கி சென்றனர்.

    14 மாவட்டங்களில் வேகமாக குறையும் தொற்று.. கோவை, கடலூரில் மோசமாகும் பாதிப்பு14 மாவட்டங்களில் வேகமாக குறையும் தொற்று.. கோவை, கடலூரில் மோசமாகும் பாதிப்பு

    உப்புக்காற்றில் ஆனந்தம்

    உப்புக்காற்றில் ஆனந்தம்

    பொதுவாக கொரோனாவிற்கு முன்பு சென்னை மக்களின் பெரிய பொழுதுபோக்கு என்றால் மெரினா கடற்கரைக்கு வந்து காற்று வாங்குவது தான். புழுக்கம் நிறைந்த வீட்டில் இருந்து புறப்பட்டு உப்புக்காற்றில் மணலில் தவழ்ந்து குழந்தை போல் மக்கள் குவிந்து சந்தோஷமாக இருந்துவிட்டு செல்வார்கள். இதனால் எப்போதுமே ஞாயிறு அன்று மெரினாவில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    திரையரங்குகள் மூடல்

    திரையரங்குகள் மூடல்

    இந்நிலையில் அரசு ஊரடங்கை தளர்த்திய போதும், மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தளங்களை திறக்க அனுமதிக்கவில்லை. இதன்படி சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்கள் எல்லாமே சென்னையில் மூடப்பட்டுள்ளது.

    திருப்பி அனுப்பிய போலீஸ்

    திருப்பி அனுப்பிய போலீஸ்

    ஊரடங்கு இன்று இல்லை என்பதால் பேருந்துகளிலும், வாகனங்களிலும் மெரினா கடற்கரைக்கு பலரும் இன்று இரவு ஆசையோடு குவிந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள், சோகத்துடன் வீடு திரும்பினர்.

    போலீசார் அதிர்ச்சி

    போலீசார் அதிர்ச்சி

    இதனிடையே சிலர் மெரினா கடற்கரையில் அனுமதி கிடைக்காதால் அருகில் உள்ள பட்டினம்பாக்கம் கடற்கரையில் அதிகம் பேர் குவிந்தனர். மக்கள் அங்கு முககவசத்தை மறந்து, சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக குவிந்து இருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி, வெளியேற்றி அனுப்பி வைத்தனர்.

    English summary
    Crowd at Chennai Marina due to unlock relaxation: but chennai marina police send back people for tn govt not open tourist place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X