சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே போடு.. ஏன் பெட்ரோல் விலையை குறைக்கல.. ‛‛விஷயத்தை’’ கூறி மத்திய அரசை தாக்கிய ஆனந்த் ஸ்ரீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: ‛‛9 மாதங்களில் இல்லாத வகையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 85 டாலராக குறைந்துள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்''என காங்கிரஸ் கட்சியின் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பி மத்திய அரசை தாக்கி உள்ளார்.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்நிலையில் தான் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்வு ஒரு லிட்டரின் விலை ரூ.110யை தொட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

2 லட்சம் கேஸ்..11 வருஷ சர்வீஸ்? வாயை கொடுத்து மாட்டிக்கிட்டீங்களே! அண்ணாமலையை கலாய்த்த நெட்டிசன்கள்! 2 லட்சம் கேஸ்..11 வருஷ சர்வீஸ்? வாயை கொடுத்து மாட்டிக்கிட்டீங்களே! அண்ணாமலையை கலாய்த்த நெட்டிசன்கள்!

பெட்ரோல்-டீசல் விலை

பெட்ரோல்-டீசல் விலை

தமிழகத்தில், 2021 நவம்பர் 3ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலும் இருந்து எழுந்தது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மே 21ல் ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

129 வது நாளாக மாற்றமில்லை

129 வது நாளாக மாற்றமில்லை

இதனையடுத்து கடந்த மே 22ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. இருப்பினும் தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100யை கடந்து விற்பனையாகிறது. இந்நிலையில் தொடர்ந்து 129-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில், பெட்ரோல் 102.63 ரூபாய், டீசல் 94.24 ரூபாய் என விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை குறைவு

கச்சா எண்ணெய் விலை குறைவு

இந்நிலையில் தான் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் அதிக டாலருக்கு விற்பனையானது. தற்போது ரூ.85.97 டாலருக்கும் சரிந்துள்ளது. இருப்பினும் கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

 ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி


இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கச்சா எண்ணெய் 85 டாலராக 9 மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இருப்பினும் நுகர்வோருக்கு நிவாரணம் இல்லையே ஏன்'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
A barrel of crude oil fell to a 9-month low of $85. However, Congress Party economist Anand Srinivasan has attacked the central government by questioning why they are not providing relief to the public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X