அவர் மட்டுமா? தோனியின் "டெஸ்ட்" பேட்டிங் பற்றி பிளமிங் அடித்த கமெண்ட்.. என்னென்ன சொல்றாரு பாருங்க!
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் பேட்டிங் குறித்து பயிற்சியாளர் பிளமிங் பேட்டிங் அளித்துள்ளார்.
நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே 136 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய டெல்லி 139 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
சேலம் விருந்தில் போட்ட ஸ்கெட்ச்.. மறுநாளே கொலை.. கோடநாடு கேஸில் அதிர்ச்சி தரும் செபி.. 3 மர்மங்கள்!
நேற்று சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக அமைந்து இருந்தது. முக்கியமாக தோனி ஆமை வேகத்தில் மிக மிக மெதுவாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். 27 பந்துகள் பிடித்தவர் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் வெறும் 66.67தான்.

தோனி
தோனி மிக மோசமாக பேட்டிங் செய்து இருந்தார். அணியின் தோல்விக்கு இவரின் ஸ்லோ பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம் ஆகும். தோனி கடந்த சீசனில் இருந்தே சரியாக பேட்டிங் செய்வது இல்லை. தோனியின் இந்த ஆட்டம் ரசிகர்கள், விமர்சகர்கள் இடையே கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் தோனியின் பேட்டிங் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

செமி பைனல்
அதில், செமி பைனலில் தோல்வி அடைவதை விட இப்போது இரண்டு போட்டிகளில் தோல்வி அடைவது சிறப்பானதே. செமி பைனலில் நாக் அவுட் போட்டியில் தோல்வி அடைவதற்கு பதிலாக இப்போது ராஜஸ்தான், டெல்லி அணியிடம் தோல்வி அடைந்து உள்ளோம். இன்றைய ஆட்டம் நன்றாக இருந்தது. இரண்டு அணிகளும் நிறைய தவறுகளை செய்தோம்.

இரண்டு அணிகள்
இரண்டு அணிகளும் முக்கிய இடங்களில் சொதப்பினோம். நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டோம். அணியில் சிலர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பார்மிற்கு வருவதற்கு தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார்கள். சில விஷயங்கள் மாறும் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் எங்கள் வேகத்தை தொடர்ந்து நீட்டிக்க முயன்று கொண்டு இருக்கிறோம்.

பயணம்
கடந்த 5 நாட்களில் 3 போட்டிகளில் ஆடி இருக்கிறோம். நிறைய பயணம் மேற்கொண்டு இருக்கிறோம். இதனால் களத்தில் சில தவறுகளை செய்து இருக்கிறோம். ஆனால் ஆட்டத்தில் இப்படி நடப்பது சகஜம். இதுபோன்ற சமயங்களில் மீண்டு வருவது முக்கியம். நாங்கள் விரைவில் மீண்டு வருவோம். கடந்த இரண்டு போட்டிக்கு முன்பு இருந்த அதே இன்டன்சிடிட்டியை நாங்கள் மீண்டும் கொண்டு வர முயற்சி செய்வோம்.

முயற்சி
டேபிளில் டாப் இரண்டு இடங்களில் இடம் பிடிக்க நாங்கள் முயற்சி செய்வோம். அணியில் தோனியின் பேட்டிங் பார்ம் சரியில்லை என்று கூறமுடியாது. தோனி மட்டும் அணியில் கஷ்டப்படவில்லை. 137 என்பது கிட்டத்தட்ட போதுமான ரன்கள்தான். இந்த பிட்ச் கொஞ்சம் ஆடுவதற்கு கஷ்டமான விக்கெட். இதனால் வீரர்கள் சரியாக ரன் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டனர்.

தோனியின் பேட்டிங்
எதிரணி வீரர்களும் இதனால் சரியாக ஆட முடியாமல் சிரமப்பட்டனர். நாங்கள் 15 ரன்கள் கூடுதலாக அடித்து இருந்தால் ஒருவேளை வெற்றிபெற்று இருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். நாங்கள் சிறப்பாகவே ஆடினோம் என்று சொல்ல வேண்டும். சில தவறுகளை நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும், மற்றபடி அணியில் எல்லாமே நன்றாக இருந்தது என்று சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் குறிப்பிட்டுள்ளார்.

பிளமிங் பேட்டிங்
தோனியின் பேட்டிங்கை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் பிளமிங் மட்டும் அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார். தோனிக்கு ஆதரவாக கடந்த வருடமே பிளமிங் பேசி இருந்தார். இந்த நிலையில் தற்போது தோனியை விமர்சனம் செய்யாமல் அவருக்கு ஆதரவாக பிளமிங் பேசி இருக்கிறார். சிஎஸ்கே அணி தொடர்ந்து தோனிக்கு ஆதரவு அளித்து வருகிறது.