• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"முதல்வர் அன்புமணி".. ஓட்டு வாங்கி தராவிட்டால்.. மாடு மேய்க்கும் சிறுவன் தான்.. கொந்தளித்த ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: "கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியவில்லை என்றால் மாடு மேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டி இருக்கும்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

  கோட்டையில் PMK கொடி பறக்கும்.. நீங்கள் ஆண்ட பரம்பரை.. Dr Ramadoss அட்வைஸ்

  வடமாவட்டங்களில், பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.

  இதன்காரணமாக, அக்கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் கடந்த வாரம் திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

  என்ன இது அநியாயமா இருக்கு.. பிரியாணி 100 ரூபா.. தக்காளி சாதம் 200 ரூபாயா?என்ன இது அநியாயமா இருக்கு.. பிரியாணி 100 ரூபா.. தக்காளி சாதம் 200 ரூபாயா?

   டாக்டர் ராமதாஸ்

  டாக்டர் ராமதாஸ்

  இதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசிய பேச்சு அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. "தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம்... நம்மிடம் சக்தி இல்லை... சக்தியை இழந்து கிடக்கிறோம்... ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்க தான் சொன்னீங்க.. இதனால் மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்தோம். நடந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தான் வெற்றி பெற்றோம்.. உள்ளூர் புரிதலுக்கு விட்டுக் கொடுப்பது என திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பாமகவுக்கு குழி பறித்தனர்..

   உள்ளாட்சி தேர்தல்

  உள்ளாட்சி தேர்தல்

  இதுதான் உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது.. அதனால், இதுக்கெல்லாம் ஒரே வழி, திண்ணை பிரச்சாரம்தான்.. வரும் சட்டசபை தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும், அன்புமணிக்கு என்ன குறை? அவரது தலைமையில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும்.. ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு, அவர்கள் தரும் சாப்பாட்டை சாப்பிட்டு, அங்கேயே படுத்து தூங்கி, 100க்கு 40 சதவீத வாக்குகளை பெற்று 60 எம்எல்ஏக்களை பெற வேண்டும்" என்றார்.

   ஆலோசனை கூட்டம்

  ஆலோசனை கூட்டம்


  இந்நிலையில், ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது, "10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது... சிறப்பான வழக்கறிஞரையும் நியமனம் செய்துள்ளது... அதனால் தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வரப்போகும் தேர்தலில் பாமக வெற்றி பெற்று, அன்புமணி ராமதாஸ் முதல்வராக வேண்டும் என்று கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும்.

   திண்ணை பிரச்சாரம்

  திண்ணை பிரச்சாரம்

  இதற்காக திண்ணை பிரசாரம், சோஷியல் மீடியாக்களை அதிகமாக பயன்படுத்தி, மக்களிடம் நெருங்கி செல்ல வேண்டும். கடந்த சட்ட மன்ற தேர்தலில், உள்கட்சி பிரச்னையால்தான் கடலூர் மாவட்டத்தை இழந்தோம்.. கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியாவிட்டால், மாடு மேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டி இருக்கும்... உள்ளாட்சி தேர்தலிலும் விலை போனவர்களால் தோல்வி அடைந்தோம்" என்றார். இதையடுத்து, கட்சித் தலைவர் ஜிகே மணி பேசும்போது "பாமகவின் கோட்டை என்று சொல்லப்படும் இடங்களிலேயே கோட்டை விட்டுள்ளோம்.. அதனை தான் முதலில் மீட்க வேண்டும்" என்றார்.

  English summary
  Cuddalore PMK Meeting and Fouder Dr Ramadoss says about 10.5 reservation issue
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X