சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் ஸ்டாலின்.. குட்புக்கில் இடம் பெற போட்டா போட்டி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது- வீடியோ

    சென்னை: சட்டசபை இடைத் தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

    தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் மூலம் ஆட்சியை பிடிக்கமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் திமுகவினர்.

    curiosity raises among officers on dmk

    ஒவ்வொருமுறையும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ஆட்சியாளர்கள் தங்களுக்கு இணக்கமான அதிகாரிகளை முக்கிய பதவியில் அமர்த்துவது வழக்கம். அந்த வகையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை முடித்த ஸ்டாலின், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகள் லிஸ்ட்டை ரெடி செய்யும் பணியில் ஈடுபட உள்ளாராம்.

    தனது தலைமையில் அமையும் ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தாத வகையில் செயல்படும் அதிகாரிகள் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என நினைக்கிறாராம் ஸ்டாலின். மேலும், தனது செயல்பாட்டுக்கு ஈடுகொடுத்து பணிகளை நிறைவேற்றும் அதிகாரிகள் யார் யார் என்பது குறித்தும் விவாதித்து வருகிறாராம் அவர்.

    2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே! தேனி தொகுதியில் பெரும் குளறுபடி 2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே! தேனி தொகுதியில் பெரும் குளறுபடி

    இதனிடையே அதிமுக ஆட்சியில் ஓரம்கட்டப்பட்ட, முக்கியத்துவமில்லாத பணிகள் ஒதுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடிக்க இப்போதே பல்வேறு வழிகளில் காய்களை நகர்த்துகிறார்களாம்.

    English summary
    Both IAS and IPS officers are in big expectation about the possibility of DMK capturing the power after Assembly by election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X