சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்ட சுமை குறைகிறது.. தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடி!

பள்ளிகளில் பாடம் குறைப்பது குறித்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பாடத்திட்ட சுமையை குறைக்க மாநில அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறது.. வரும் 5-ம்தேதி முதல் மாணவர்களின் விருப்பத்தின்பேரில் பள்ளிகளில் அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டும் வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து லாக்டவுன் நமக்கு போடப்பட்டு கொண்டே இருப்பதால், பள்ளிகள் திறப்பதும் தள்ளி போய் கொண்டே இருக்கிறது.. இருந்தாலும், பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன.

ஆனாலும் அவைகள் போதுமான திருப்தியை பெற்றோர்களுக்கும், கல்வித் தரப்புக்கும் தரவில்லை... அதனால் பள்ளிகள் திறப்பது ஒன்றுதான் இதற்கு சரியான வழி என்பதும் உணர்ந்ததை அடுத்து, அவைகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியும் எழ ஆரம்பித்தது.

இந்தியாவில் 49 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு- 80 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள் இந்தியாவில் 49 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு- 80 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள்

கல்வி நிறுவனம்

கல்வி நிறுவனம்

ஜூலை மாதத்துக்கு பிறகு கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி தந்திருந்தது.. ஆனால், இதற்கு பெற்றொர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.. இதற்கு பிறகு, பள்ளி, கல்லூரிகளை திறப்பு குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எதையுமே எடுக்கவில்லை.. ஆலோசனைகள்தான் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வந்ததே தவிர, இன்னும் அறிவிப்பு சொல்லவிலை.

கருத்துக்கள்

கருத்துக்கள்

இந்த விஷயத்தில் பெற்றோர்கள் ஒப்புதல்தான் முக்கியம் என்பதால், பள்ளிகளை திரும்பவும் எப்போது திறக்கலாம் என்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்டு தெரிவிக்குமாறு அனைத்து மாநில கல்வித்துறை செயலர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
மேலும், வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளை திறக்கலாம், மாணவர்களை, பகுதி நேரமாக பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆய்வக வகுப்பு

ஆய்வக வகுப்பு

இதையடுத்துதான், அக்டோபர் 5 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பகுதி நேரமாக முக்கிய வகுப்புகளையும், ஆய்வக வகுப்பையும் நடத்தலாம் என்று தமிழக பள்ளி கல்வித்துறையும் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாகவே, நேற்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர்கள் கண்ணப்பன், உஷா ராணி, பழனிசாமி பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்... அப்போது, பள்ளிகளை திறப்பது குறித்து, சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது... மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பின், பள்ளிகள் திறப்பு தேதியை முதலமைச்சரிடம் சொல்லி, அவரது ஒப்புதல் பெறலாம் என்றும் முடிவாகி உள்ளது. கூடிய சீக்கிரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

கல்வித்துறை

கல்வித்துறை

இதனிடையே, பள்ளிகளில் பாடம் குறைப்பு குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது, பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது... எந்தெந்த பாடங்களை குறைப்பது என்பது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியே, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பாடத்திட்ட சுமையை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இவ்வளவு காலம் பள்ளிகள் மூடப்பட்டதால்,நிறைய பாடங்கள் தேங்கி உள்ளன.. எல்லாவற்றையும் ஆசிரியர்களால் நடத்தி முடிக்கவும் முடியாது.. அதனால் பல மாநிலங்கள் தங்களது பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நமக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை தமிழக அரசு அமைத்தது.

அறிக்கை

அறிக்கை

இந்த நிபுணர் குழுவானது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே முதல்கட்ட அறிக்கையும் தாக்கல் செய்தது.. தற்போது 2-ம் கட்ட அறிக்கையை நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ளது.

சுழற்சி முறை

சுழற்சி முறை

அதன்படி, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருக்கிறது. அதனால், இவர்களுக்கான கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது என்பதால், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களை மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவழைத்து வகுப்புகள் எடுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.. வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் மாணவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிகளில் அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆலோசனை

ஆலோசனை

1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளி வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு ரிவிஷன் எக்ஸாம் அதாவது திருப்புதல் தேர்வு மட்டும் நடத்தி இந்த கல்வியாண்டை நிறைவு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதாவது, அக்டோபர் 5-ம் தேதி முதல் மாணவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிகளில் அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.. எனினும், மத்திய அரசின் முடிவை பின்பற்றி நடக்கத்தான் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

English summary
Curriculum reduction work completed TN School Education
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X