சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் திடீரென அதிகரித்த சைக்கிள் விற்பனை...இதுவும் காரணமா?

Google Oneindia Tamil News

சென்னை: பொது முடக்கம் அமலில் இருப்பதால், பலரும் தற்போது சைக்கிள் கிளப்பில் இணைந்து சைக்கிள் ஓட்டுவதை விரும்புகின்றனர். பல்வேறு இடங்களுக்கும் சைக்கிளில் சென்று வருகின்றனர். இப்படித்தான் டேராடூனில் இருக்கும் ருத்ராபூரில் இருக்கும் சைக்கிள் கடைகளில் ஜூன் மாதம் 25% சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது.

Recommended Video

    Hero Cycle Cancel 900 Crore Deal With China | Boycott China |Oneindia Tamil

    நாடு முழுவதும் சில இடங்களில் தற்போது சைக்கிளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அகில இந்திய சைக்கிள் தயாரிப்பாளர்கள் கழகமும் இதை ஒப்புக் கொண்டுள்ளது. இந்த மாத இறுதியில் மேலும் தேவை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

    Cycle sales increasing in India but no stocks are running out

    ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 20 மில்லியன் சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளின் மதிப்பு ரூ. 7000 கோடியாக இருக்கிறது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் தற்போது சைக்கிளுக்கு மாறிக் கொண்டு இருக்கின்றனர்.

    இந்தியாவில் சைக்கிள் உற்பத்தி குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் போதிய மூலப் பொருட்கள் இல்லை. வேலைக்கு ஆட்கள் இல்லை. கனரக வாகனங்களும் தற்போது தடைபட்டுள்ளது போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால், சைக்கிள் உற்பத்தி குறைந்து, இருப்பும் குறைந்துள்ளது.

    இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து இவர்களிடம் இருந்து தேவைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சைக்கிளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

    மதுரையில் ரூ. 10 க்கு உணவு வழங்கி வந்த ராமு தாத்தா காலமானார்...மக்கள் சோகம்!!மதுரையில் ரூ. 10 க்கு உணவு வழங்கி வந்த ராமு தாத்தா காலமானார்...மக்கள் சோகம்!!

    மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் சைக்கிள் கிளப்புகளில் உறுப்பினர்கள் சேருவதும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் பத்து லட்சம் ரூபாய்க்கு சைக்கிள் விற்பனை செய்தவர்கள் நடப்பாண்டில் ஜூன் மாதம் 18 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

    பெரும்பாலானவர்கள் பொது வாகனங்களுக்கு பல மணி நேரம் காத்து இருக்க வேண்டியது இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகள் அதிகமாக இருப்பதால் அவர்களால், கார், பைக் போன்றவை வாங்க முடியாத நிலையில், சைக்கிள் வாங்கி ஓட்டுகின்றனர். மேலும், தற்போது கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், தனி மனித சுதந்திரம் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. இதுவும் சைக்கிள் வாங்குவதற்கு மக்களை தூண்டியுள்ளது என்று கூறலாம்.

    இதுபோன்ற காரணங்களால் மாசும் குறைந்துள்ளது. சிலர் தனியார் வாகனங்களில் பயணிப்பதை பாதுகாப்பு இல்லை என்று உணருகின்றனர். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு பயிற்சி அளிக்கிறது. ஜிம், நடைபயிற்சி என்று சென்று கொண்டு இருந்தவர்களுக்கு கொரோனா காலத்தில் சைக்கிள் ஊட்டுவதும் நல்ல பயிற்சிதான்

    English summary
    Cycle sales increasing in India but no stocks are running out
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X