சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக எல்லையை கடந்தது ஃபானி புயல்... ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Fani : தமிழக எல்லையை கடந்தது ஃபனி புயல்...என்ன ஆனது?- வீடியோ

    சென்னை: 'ஃபானி' புயல் தமிழக எல்லையை கடந்து சென்றது. நாளை ஒடிசாவில் கரையை கடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    வங்கக் கடலில் உருவான, ஃபானி புயல், முதலில், சென்னை மற்றும் ஆந்திரா இடையே புயல் தாக்கும் என, கணிக்கப்பட்ட நிலையில், கடலியல் சூழலால், புயல் திசை மாறி, ஒடிசாவுக்கு நகர்ந்துள்ளது. இந்த புயல் நேற்று, தமிழகத்தின் வடக்கு கடற்கரையோரமாக, 300 கி.மீ.,யில், நெருங்கி வந்தது. அதனால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    Cyclone Fani crossed the border of Tamil Nadu, tomorrow crossing the border in Orissa

    இன்று, ஆந்திராவில் இருந்து சற்று துாரத்தில், கடல் வழியே சுழன்று, நாளை, ஒடிசாவில் கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே, நாளை மாலை 5.30 மணிக்கு ஃபானி புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    டேய்.. நாக பாம்புடா.. பயமா இருக்கு.. விட்றா.. மாறன் வந்துட்டார்ல.. பாம்பை பிடிச்சிடுவார்! டேய்.. நாக பாம்புடா.. பயமா இருக்கு.. விட்றா.. மாறன் வந்துட்டார்ல.. பாம்பை பிடிச்சிடுவார்!

    இதனால் ஒடிசாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பத்துலட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே கிழக்குக் கடலோரப் பகுதிகள் வழியாக இயக்கப்படும் 103 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஃபானி புயல், தற்போதைய பலத்துடன், தமிழகத்தில் கரை கடந்திருந்தால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், புயல் திசை மாறியதால், மோசமான பாதிப்பில் இருந்து, தமிழகம் தப்பியுள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Tomorrow Cyclone Fani crossing the border in Orissa
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X