சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதி தீவிர புயலாக மாறிய ஃபனி.. சென்னை மெரினா கடற்கரையில் முழு உஷார் நிலை

Google Oneindia Tamil News

சென்னை: ஃபனி புயல் அதி தீவிர புயலாக, வங்கக் கடலில் சுழன்றடிக்கும் சூழ்நிலையில், மெரினா கடற்கரையில், மீட்பு படையினர், மற்றும் மீட்பு வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

Cyclone Fani: Fire and rescue team on duty at Chennai Marina

இன்று காலை நிலவரப்படி, வங்கக் கடலில் ஃபனி புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 690 கி.மீ தொலைவில் இருந்தது. இந்த புயல், சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 300 கி.மீ தூரம் வரை வந்து பிறகு திசை மாறி, ஒடிசா கடற்கரை நோக்கி சென்று, வரும் 4ம் தேதி ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cyclone Fani: Fire and rescue team on duty at Chennai Marina

அதேநேரம், புயல் தாக்கத்தால், இன்று முதல் சென்னை, உட்பட வட தமிழகத்தில், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர். கடற்கரை அருகே செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு 10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு

ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், மக்களை காப்பாற்ற தீயணைப்பு துறை வாகனங்கள் உட்பட பல்வேறு மீட்பு வாகனங்கள் மெரினாவில் காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே மெரினா பீச் செல்வோர் அதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

English summary
Fire and rescue team on duty at Chennai Marina ahead of Fani cyclone will land fall in Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X