சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே வருவதால் தற்போது தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?

    சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபனி புயல் தற்போது எங்கு இருக்கிறது, சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முதல்நாள் தாழ்வு மண்டலமாக மாறியது. இது தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஃபனி புயல் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த புயல் தமிழகத்தை தாக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. பெரும்பாலும் சென்னைக்கு அருகில் இந்த புயல் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டது.

    கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவல்... ராமநாதபுரத்தில் கண்காணிப்பு தீவிரம்கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவல்... ராமநாதபுரத்தில் கண்காணிப்பு தீவிரம்

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த புயல் வலுவடைய வலுவடைய கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறி வருகிறது. அதன்படி ஏப்ரல் 30 ம் தேதி வரை இது வடமேற்கு திசையில் நகர உள்ளதாக கூறப்பட்டது. அதாவது ஏப்ரல் 30 வரை மட்டுமே இந்த புயல் சென்னையை நோக்கி நகரும்.

    ஏன் ஆகும்

    ஏன் ஆகும்

    அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட கிழக்கு திசையில் திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னைக்கு இந்த புயலால் பாதிப்பு இல்லை. இந்த புயல் தமிழகத்தில் இருந்து சுமார் 200 கிமீ அருகில் வரை வரும். அதன்பின் திசை மாறி சென்றுவிடும்.

    எங்கு உள்ளது

    எங்கு உள்ளது

    ஃபனி புயல் நேற்று வரை சென்னையில் இருந்து 1350 கிமீ தூரத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 1050 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த புயல் மிக மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. சமயங்களில் 40 கிமீ வேகத்திற்கும் குறைவாக கூட இந்த புயல் நகர்ந்து வருகிறது.

    எப்படி மாறும்

    எப்படி மாறும்

    இந்த புயல் இன்று மாலைக்குள் வேகம் எடுக்கும். இன்று அது தீவிர புயலாகவும், அதன் பின்னர் அதிதீவிர புயலாகவும் மாற உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    English summary
    Cyclonic Storm ‘FANI’ lay centred at 0530 hrs over southeast Bay of Bengal & neighbourhood, about 745 km east-southeast of Trincomalee (Sri Lanka), 1050 km southeast of Chennai (Tamil Nadu) and 1230 km south-southeast of Machilipatnam (Andhra Pradesh).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X