சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேயாட்டம் ஆடிய ஃபனி .. வீடியோவை பார்த்தாலே பகீர் என்கிறதே.. நல்ல வேளையாக தப்பியது சென்னை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Fani Cyclone : 10 ஆயிரம் கிராமங்களில் ருத்ரதாண்டவம்..துயரத்தில் ஒடிஸா மக்கள்

    சென்னை: ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையை கடந்த ஃபனி பேயாட்டம் ஆடி விட்டு சென்ற வீடியோ காட்சிகளை பார்த்தாலே பதை பதைக்க வைக்கிறது.

    வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் தமிழகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எல்லாம் விடுக்கப்பட்டது. எனினும் புயலில் ஒரு டுவிஸ்டாக இந்த புயல் மெல்ல நகர்ந்து ஒடிஸாவை நெருங்கியது.

    இதையடுத்து அந்த மாநிலத்துக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று புரி அருகே கோபால்பூர்-சந்த்பாலி இடையே ஃபனி கரையை கடந்தது. அப்போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் தமிழகத்துக்கு வராமல் போனதால் மக்கள் மனவருத்தம் அடைந்தனர்.

    ஆனால் ஒடிஸாவில் செய்த நாசவேலையை பார்க்கும் போது அய்யோ தமிழகத்துக்கு வராதது ஒரு விதத்தில் நல்லது போல என்கிறது மனம். எனினும் ஒடிஸா சகோதர, சகோதரிகள் இந்த துயரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டனர். இந்த புயல் விட்டு சென்ற கோர சம்பவங்களின் வீடியோ தொகுப்பு:

    கோபத்தை கொட்டித் தீர்த்த ஃபனி.. 10 ஆயிரம் கிராமங்களில் ருத்ரதாண்டவம்.. துயரத்தில் ஒடிஸா மக்கள் கோபத்தை கொட்டித் தீர்த்த ஃபனி.. 10 ஆயிரம் கிராமங்களில் ருத்ரதாண்டவம்.. துயரத்தில் ஒடிஸா மக்கள்

    நாசம் செய்த ஃபனி

    ஃபனி புயல் பெட்ரோல் பங்கையே சூறையாடிய வீடியோ காட்சிகளை பார்க்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

    ஃபனி காற்று

    ஃபனி புயல் கரையை கடக்கும் போது 170 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    கவிழ்ந்த பஸ்

    ஃபனி புயலின் காற்றின் வேகத்தால் ஒரு கல்லூரியில் நின்று கொண்டிருந்த பேருந்தையே கவிழ்த்து போட்டது. இது போல் ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியது.

    புரியில் நிலச்சரிவு

    ஃபனி புயலின் போது வீசிய காற்றால் புரியில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.

    English summary
    Cyclone Fani Kills multiple and submerges Villages in India multiple Airports To Be Shut due to high velocity winds with speed of 175 kmph in vast areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X