சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. அடுத்து புயல்தான்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலம் பெற்றுள்ளது. அடுத்து இது ஃபனி புயலாக மாற வாய்ப்பு உருவாகியுள்ளது.

கிழக்கு இந்திய பெருங்கடல்-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக புயலாக வலுவடைந்து 4 நாட்களில் தமிழகத்தை நெருங்கும்.

Cyclone Fani: Low pressure area system become strong as depression

புயல் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தை தாக்கும் என்று கூறப்படுகிறது. சில வானிலை ஆய்வு மையத்தினர், அது ஆந்திராவில்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இருப்பினும் வட தமிழகத்திற்கு மழை கேரண்டி என்பதே அனைவரும் ஒரு சேர கூறுவதாகும்.

ஃபனி புயலால் பாதிப்பா.. உயர் அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை ஃபனி புயலால் பாதிப்பா.. உயர் அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை

புயல் உருவாக உள்ளதையடுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் சென்னையில் இன்று தமிழக உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது.

English summary
Low pressure area system become a tropical depression in bay of bengal which will devolope as cyclone Fani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X