சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக கூறியுள்ள, சென்னை வானிலை ஆய்வு மையம், இது புயலாக மாறி 30ம் தேதி தமிழக கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரிடும் பணி சுவாரசியமானது. 2000மாவது ஆண்டு முதல்தான், இந்திய பெருங்கடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டது. 2004ல் இதற்கு மேலும் மெருகேற்றம் செய்யப்பட்டது.

Cyclone Fani: What is the meaning and which country named it?

அதாவது, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான, இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மரம், ஓமன், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளும், இப்பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

பெயர்களை சூட்டிக்கொள்வதால், மக்கள் மத்தியில் அதுகுறித்து தகவல் தொடர்பு செய்துகொள்வதில் வசதி ஏற்படுகிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கைக்கும், இது ரொம்பவே பயன்படுகிறது.

பவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன் பவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்

சமீபத்திய சில புயல்களும், அவற்றுக்கு பெயரிட்ட நாடுகளையும் பாருங்கள்: கஜா - தாய்லாந்து, பேதை-இலங்கை, வாயு-இந்தியா, ஹிகா-மாலத்தீவு, க்யார்-மியான்மர், மஹா-ஓமன், புல்புல்-பாகிஸ்தான், பவன்-தாய்லாந்து, அம்பன்-இலங்கை. இப்படி போகிறது லிஸ்ட். இதில் ஃபனி புயலுக்கு பெயர் சூட்டியுள்ளது வங்கதேசம்.

ஃபனி புயல் பெயர் காரணம்

ஃபனி என்பது உருது வார்த்தை. இதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. பிரமாண்டமானது, ஆபத்தானது என்பது போன்ற பல்வேறு அர்த்தங்கள் வருகின்றன. ஆனால், பெயரே டெரராக இருப்பது மட்டும் உறுதி.

English summary
The process of naming cyclones is done under the supervision of the World Meteorological Organisation. For the area in and around Indian Ocean, the talks over naming cyclones started in 2000 and in 2004, a formula was agreed upon. Eight nations in South and South-East Asia, namely, Bangladesh, India, Maldives, Myanmar, Oman, Pakistan, Sri Lanka and Thailand have come up with their respective sets of names that are assigned to the cyclone storm in a sequence. The naming helps the weather forecaster and general people for an easy communication.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X