சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா பாதிப்பே இன்னும் அகலவில்லை.. அதற்குள் வந்துவிட்டது ஃபனி புயல்.. அரசு இப்போதாவது சுதாரிக்குமா?

ஃபனி புயல் தமிழகத்தை நோக்கி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றுள்ள நிலையில், தமிழக அரசு இந்த முறையாவது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு-வீடியோ

    சென்னை: ஃபனி புயல் தமிழகத்தை நோக்கி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றுள்ள நிலையில், தமிழக அரசு இந்த முறையாவது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    தமிழகத்தை இன்னும் சில நாட்களில் ஃபனி புயல் தாக்க உள்ளது. இந்த புயல் இன்னும் முழுதாக உருவாகவில்லை. ஆனால் இது கண்டிப்பாக தமிழகத்தை தாக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    வானிலை மைய அதிகாரிகள் இதற்காக தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுத்துள்ளனர். இந்த வாரம் தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஃபனி புயலை பார்த்து தமிழக மக்கள் பயப்பட வேண்டாம்.. ஏன் தெரியுமா? வானிலை ஆய்வாளர் விளக்கம் ஃபனி புயலை பார்த்து தமிழக மக்கள் பயப்பட வேண்டாம்.. ஏன் தெரியுமா? வானிலை ஆய்வாளர் விளக்கம்

    என்ன நிலை

    என்ன நிலை

    வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேரம் செல்ல செல்ல வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல்

    கஜா புயல்

    கடந்த வருடம்தான் தமிழகத்தை கஜா புயல் தாக்கியது. தமிழகத்தை தாக்கிய மோசமான புயல்களில் கஜா புயலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்கள் இந்த புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    கஜா புயலின் போது தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று புகார் வந்தது. புயலின் அன்று அரசு கொஞ்சம் தீவிரமாக செயல்பட்டாலும், புயலுக்கு பின்பாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். தென்னை மரங்கள் அதிகம் விழுந்ததால் மக்கள் பெரிய நஷ்டத்திற்கு உள்ளானார்கள்.

    பெரிய விமர்சனம்

    பெரிய விமர்சனம்

    தமிழக அரசின் இந்த மெத்தனப்போக்கு பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல் மத்திய அரசும் கஜா புயல் நிவாரணத்தை பெரிய அளவில் அளிக்கவில்லை. இந்த கஜா புயல் தமிழக தேர்தல் களத்திலும், பிரச்சார களத்திலும் மிக முக்கியமான ஒன்றாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

    இப்போதுதான் முக்கியம்

    இப்போதுதான் முக்கியம்

    இந்த நிலையில் தமிழக அரசு இந்த முறையாவது புயலுக்கு முன் சுதாரிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. குறைந்தபட்சம், ஃபனி புயல் தமிழகத்தை தாக்கும் முன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English summary
    Cyclone Fani: Will Tamilnadu govt take precaution measures before the storm?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X