சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தில்லு, தைரியம் இருந்தா.. ராம்நாடுக்கு வாடா.. பனை மரத்துல வவ்வாலா.. #கஜாவுக்கே சவாலா!

கஜா புயலை மையமாக வைத்து ட்விட்டர் கமெண்ட்களை வைரலாகி வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையை நெருங்கியது கஜா, 3 நாட்களுக்கு மழை பெய்யும்- வீடியோ

    சென்னை: கிட்டத்தட்ட மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு ஆயிடுச்சு நம்மை சாய்ச்சுட்டு போற புயல் கூட!! எல்லாம் கஜாவை பத்தின செய்திதான்!!

    கஜா.. என்ற பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்லை.. ஆமாம். பொதுவாக சுழட்டியடிக்கும் புயல்களுக்கு வித்தியாசம் தெரிய வேண்டும் என்றும்தான் பெயர் வைக்கும் பழக்கமே ஆரம்பிக்கப்பட்டது.

    உலகத்தில எல்லாரும் ஈசியா அந்த பெயரை சொல்லணும் என்பதற்காகவே எல்லா புயல்களுக்கும் உலகம் முழுவதும் குட்டியான 2, 3 எழுத்துக்களே உள்ள பெயர்கள் வைக்கப்படுகின்றன.

     ஆண் புயல்கள்

    ஆண் புயல்கள்

    அதிலும் புயலுக்கு பெண் பெயர் வைத்தால் அலட்சியமான மனோபாவம் மக்களுக்கு வந்துவிடுகிறதாம். அதனால் அழிவும் கூடுதலாகி விடுகிறதாம். எனவேதான் பயங்கரமான, டெரரான ஆண் பெயர்களை புயலுக்கு வைக்கிறார்கள். இப்படி பெயர் வைத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நடந்து கொள்கிறார்களாம். இப்படி ஒரு புயல் கணக்கு வழக்கத்தில் உள்ளதாக சொல்கிறார்கள்.

     ட்விட்டர்வாசிகள்

    ட்விட்டர்வாசிகள்

    இப்போதுகூட மக்களை அலர்ட் செய்ய கஜா என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். புயல் வருகிறதோ இல்லையோ, பாதிப்பு தரப்போகிறதோ, இல்லையோ, ஆனால் இந்த பெயரை கேட்டதும் 'தாதா' ரேஞ்சுக்கு ஒரு பயம் ஒட்டிக் கொண்டது. போதாக்குறைக்கு கஜா இங்க இருக்கான், அங்க இருக்கான், கிட்ட வர்றான் என்று வானிலை செய்திகளும் தெறிக்க விட நடுக்கத்தில் கஜாவை வைத்து மீம்ஸ் பண்ணும் அளவுக்கு போய்விட்டார்கள் ட்விட்டர்வாசிகள்! அவர்களின் சில கஜா ட்வீட்கள் இதோ:

    டம்மி பீஸ் ஆக்கிடாதப்பா

    புயல் வேகத்துல வந்துட்டிருக்கேன்.. குறுக்கே வெயிலை அனுப்பி என்னை டம்மி பீஸ் ஆக்கிடாதப்பா.

    தைரியம் இருந்தா வாடா

    அடேய் கஜா.. நீ தைரியமான புயலா இருந்தா ராம்நாடு பக்கம் வந்து பார்ரா ... தில்லுயிருந்தா வாடா...😎 #கஜாபுயல்

    ரொம்ப கெட்ட பையன் கஜா

    ரொம்ப கெட்ட பையன் சார் இந்த கஜா...
    நான் ரூட்ல வருவேன்னு எனக்கே தெரியாது...
    #கஜாபுயல்

    அடடே அடடா அயயோ!

    #கஜாபுயல் கூட உன் வார்த்தைகளின் ஓசையால் கரைந்து திசை மாறி சுற்றுகிறதோ என்னவோ ஆனால் உன் உச்சரிப்பால் #புயல் எச்சரிக்கை கூட எனக்கு தென்றலாக தான் கேட்கிறதுகொளுத்திபோடு.

    கமல்னு பேர் வச்சிருக்கலாம்

    கஜான்னு பேரு வைச்சத்துக்கு பதில் கமல்ன்னு வைச்சிருக்கலாம் கொய்யால இப்படி கன்ப்யூஸ் பண்ணுதே

     மிரட்டல்

    மிரட்டல்

    இப்படிப்பட்ட ட்வீட்கள் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன!! வரப்போற புயல் அடிச்சி சாய்ச்சிட்டு போக போதா? இல்லை சத்தமே இல்லாம கஜா, ஜகா வாங்க போதான்னு தெரியல.. ஆனா புயலுக்கு முன்னாடியே வந்து கொண்டிருக்கும் ட்வீட்கள் கஜாவையும் தாண்டி மிரட்டலாக இருக்கிறது!!

    English summary
    Cyclone Gaja is trending on Twitter Now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X