சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உருவானது "கியார்" புயல்.. தமிழகத்துக்கு ஆபத்து இல்லை.. கர்நாடக கடலோரத்துக்கு கன மழை எச்சரிக்கை

அரபிக் கடலில் கியார் புயல் சின்னம் உருவாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    kyar cyclone originated in the arabian sea| உருவானது 'கியார்' புயல்...தமிழகத்துக்கு ஆபத்து இல்லை

    சென்னை: அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றது. புதிதாக உருவாகியுள்ள இந்த புயலுக்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழைபெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே அரபி கடலை மிரட்டி கொண்டிருந்தது காற்றழுத்த தாழ்வு நிலை.

    இதனால் சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டுமல்லாது, இந்திய வானிலை ஆய்வு மையமும் இது சம்பந்தமான அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு, மீனவர்களையும், பொதுமக்களையும் எச்சரித்து கொண்டே இருந்தன.

    சிக்கிம் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி வாகை சூடிய பாஜகசிக்கிம் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி வாகை சூடிய பாஜக

    கியார்

    கியார்

    இதனிடையே, அரபிக் கடலில் அக்டோபர் 25 ஆம் தேதி அதாவது இன்று மதியத்துக்குள் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது. இந்த புயலுக்கு கியார் என்றும் ஒரு பெயரை வைத்தது. இந்த புயல் மும்பையில் இருந்து 380 கிமீ தெற்கு தென்மேற்கு திசையில் உள்ளது.

    பாதிப்பு இல்லை

    பாதிப்பு இல்லை

    இது மேற்கு வடமேற்கு திசையில் ஓமனை நோக்கி நகரக்கூடும். இதனால் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் க்யார் தீவிர புயலாக மாறும். இதை தொடர்ந்து அதி தீவிர புயலாக மாறக்கூடும். ஆனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    எனினும், கடலோர மாநிலங்களானா கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    இந்த புயல் காரணமாக கொங்கன், கோவா மற்றும் கர்நாடகாவின் கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதனால், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகாவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    அதீத கன மழை

    அதீத கன மழை

    அதேபோல, மேற்கு மத்திய மற்றும் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.. அது ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்றும், இதன் காரணமாக, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் மிக கன மழை முதல் அதீத கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா

    ஒடிசா

    மேலும் ஒடிசாவின் தெற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்கள். எப்படியும் தமிழகத்தில் இன்றுகூட ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு நிச்சயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    English summary
    kyar cyclone originated in the arabian sea and Western states are prone to good rainfall
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X