சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் நோக்கி வரும் புயலுக்கு மாண்டஸ் என பெயர்.. பரிந்துரைத்தது எந்த நாடு? சுவாரஸ்யமான பெயர் காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என்ற பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்துள்ளது.

அந்தமான் கடலையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை மாலை தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என தெரிகிறது.

மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். அவ்வாறு புயலாக மாறும் போது அது தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு வரும்.

சென்னையில் 30 ஆண்டுகளில் இரு முறை.. மணிக்கு 100 கி.மீ. காற்றின் வேகம்.. வெதர்மேன் தந்த அப்டேட்! சென்னையில் 30 ஆண்டுகளில் இரு முறை.. மணிக்கு 100 கி.மீ. காற்றின் வேகம்.. வெதர்மேன் தந்த அப்டேட்!

டிசம்பர் 8 ஆம் தேதி

டிசம்பர் 8 ஆம் தேதி

அதாவது டிசம்பர் 8 ஆம் தேதி காலை தமிழகம் - புதுவை மற்றும் அதனையொட்டி உள்ள தெற்கு ஆந்திர பிரதேசம் பகுதிகளை வந்தடையும். இதனால் வடதமிவகம், புதுவை, தெற்கு ஆந்திராவில் 8ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுவை, ஆந்திரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் 8 ஆம் தேதி முதல் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.

9 ஆம் தேதி நிலவரம்

9 ஆம் தேதி நிலவரம்

பின்நர் அடுத்த நாளான டிசம்பர் 9ஆம் தேதி மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசும். வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் வைக்கப்படுகிறது. இதை ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்துள்ளது. உலக வானிலை மையத்தின் தலைவராக இருப்பவர் அப்துல்லா அல் மாண்டஸ். இவர் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர். இவரது பெயரில் உள்ள மாண்டஸ் என்ற பெயரைத்தான் அந்த நாடு புயலுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

 மாண்டஸ் என்ற பெயர் ஏன்

மாண்டஸ் என்ற பெயர் ஏன்

ஐக்கிய அரபுகள் நாட்டில் பிறந்த அப்துல்லா அல் மாண்டஸ் 1989 இல் அறிவியலில் பட்டப்படிப்பு முடித்தவர் அவர் அமெரிக்காவில் உள்ள செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் வானிலையியல் பிரிவில் பட்டம் பெற்றவர். பின்னர் அதே துறையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் படித்தார். 2012 ஆம் ஆண்டு செர்பியாவில் உள்ள பெர்கிரேட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்துள்ளார்.

பெயர் வைப்பு

பெயர் வைப்பு

உலக வானிலை மையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் புயல்களுக்கு பெயர்களை பரிந்துரைத்து வருகிறது. அந்த வகையில் வெப்ப மண்டல புயல்களுக்கு பெயர் வைக்கும் குழுவில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் ஏமன் ஆகிய 13 நாடுகள் உள்ளன. அவரை 13 பெயர்களை பரிந்துரைக்கும். ஆக மொத்தம் 169 பெயர்கள் அகர வரிசையாக வைக்கப்படும். இதுதான் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையாகும்.

நிசர்கா

நிசர்கா

அந்த வகையில் நிசர்கா, கடி, நிவர், புரேவிஸ தாக்டே, யாஸ், குலாப், ஷாஹீன், ஜவாத், அசானி ஆகிய பெயர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது முதல் செட்டில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஏமன் முறையே பரிந்துரைத்த மாண்டஸ் மற்றும் மோச்சா ஆகிய இரு பெயர்கள் மட்டுமே பாக்கி உள்ளன. வைத்த பெயர்கள் மீண்டும் வைக்கப்படாத வகையில் உலக வானிலை மையம் பெயர்களை அறிவிப்பதற்கு முன்பாக நன்கு சோதனை செய்துவிட்டே அறிவிக்கிறது.

English summary
New cyclone named as Mandous by United Arab Emirates. Why it was named so?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X