சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Nivar புயல் முன்னெச்சரிக்கை.. அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை.. மக்களை பாதுகாக்க நடவடிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

Recommended Video

    #BREAKING தமிழகத்தை தாக்க இருக்கும் நிவர் புயல் - முதல் அமைச்சர் ஆலோசனை..!

    வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வரும் 25ம் தேதி பிற்பகல், மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இது தீவிர புயலாக மாறி மணிக்கு அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.

    நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் ஒரு வாரத்திற்கு மழைதான்.. நார்வே சொல்லும் நல்ல செய்தி நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் ஒரு வாரத்திற்கு மழைதான்.. நார்வே சொல்லும் நல்ல செய்தி

    முதல்வர் ஆலோசனை

    முதல்வர் ஆலோசனை

    இந்த நிலையில்தான், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 1 மணி முதல் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    அதிக முன்னெச்சரிக்கை

    அதிக முன்னெச்சரிக்கை

    புயல் திசையை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாலாயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 120 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும் என்பதால், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

    பாதுகாப்பான இடம்

    பாதுகாப்பான இடம்

    இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு, அதிகாரிகளுக்கு முதல்வர் சில உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புயல் வீசும்போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    மின் கம்பங்கள்

    மின் கம்பங்கள்

    மின்கம்பங்கள் சாய்ந்ததால் உடனடியாக மின் கம்பங்களை பொருத்தி மின்இணைப்பை கூடிய விரைவில் வழங்குவதற்கு உரிய ஊழியர்களை நியமனம் செய்து தயார் நிலையில் வைத்திருப்பது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    English summary
    Chief Minister Edappadi Palaniswami, is holding meeting with senior ministers and officials on cyclone Nivar precautionary measures, at the Chennai Secretariat today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X