சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வட சென்னை நிலைமை ரொம்ப மோசம்.. வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்து மக்கள் அவதி

Google Oneindia Tamil News

சென்னை: வடசென்னையில் பல்வேறு வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

Recommended Video

    வடசென்னையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்.. பொதுமக்கள் அவதி - வீடியோ

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறி இன்று மாலை முதல் நள்ளிரவில் புதுச்சேரியை ஒட்டி கரையை கடக்க உள்ளதால், சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

     Cyclone Nivar: Flood in North Chennai due to heavy rain

    வடசென்னை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொருக்குப்பேட்டை, கே எம் எஸ் டிப்போ, மீனாம்பாள் நகர், ஜேஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுவரை சென்னையில் தான் அதிக மழை.. அதிதீவிரமானது நிவர்,, இனி தான் ஆட்டம் ஆரம்பம்! இதுவரை சென்னையில் தான் அதிக மழை.. அதிதீவிரமானது நிவர்,, இனி தான் ஆட்டம் ஆரம்பம்!

    தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே, முட்டி அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

     Cyclone Nivar: Flood in North Chennai due to heavy rain

    இதேபோன்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ரோட்டில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

     Cyclone Nivar: Flood in North Chennai due to heavy rain

    புயல் கரையை கடக்கும் முன்பே மழை அதிகமாக பெய்வதால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் புயல் கரையை கடக்கும் நேரங்களில் காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளம் எப்படி இருக்கும் என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    English summary
    The public is facing difficulties due to the infiltration of rain water in various houses in North Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X