சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடச்சுட உணவு

Google Oneindia Tamil News

சென்னை: மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை குடிசை பகுதிவாழ் மக்கள் 23 லட்சம் பேருக்கு நாளை தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை சுடச்சுட இலவச உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Newest First Oldest First
4:08 PM, 5 Dec

சென்னையில் குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுடச்சுட இலவச உணவு. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு திட்டம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு. டிசம்பர் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும்
4:08 PM, 5 Dec

சென்னையில் குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுடச்சுட இலவச உணவு . மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு திட்டம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு. டிசம்பர் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும்.
4:07 PM, 5 Dec

சேலத்தில் இருந்து மதிய உணவு கூட சாப்பிடாமல் கடலூர் சென்றடைந்தார் ஸ்டாலின். கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு களப்பணியில் மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார் ஸ்டாலின் .
4:06 PM, 5 Dec

கடலூர் மாவட்டத்தில் புயல்-மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் பார்வையிடுகிறார். சேலத்தில் இருந்து சென்னை திரும்பாமல் நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்.
2:20 PM, 5 Dec

புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் அறிவிப்பு. உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் அறிவிப்பு.
1:19 PM, 5 Dec

புயல் சேத பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வருகை. டிசம்பர் 8ஆம் தேதி வரை மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். முதல்வர் பழனிச்சாமியுடன் மத்தியக்குழுவினர் இன்று சந்திப்பு.
1:09 PM, 5 Dec

கடலூர் மாவட்டத்தில் புயல்-மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் ஸ்டாலின். சேலம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கடலூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்.
12:43 PM, 5 Dec

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது - வானிலை மையம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் - வானிலை மையம். டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம். சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
7:19 AM, 5 Dec

காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உள்பட இருவர் பலி. ஈஞ்சம்பாக்கத்தில் உயர் மின் அழுத்த கம்பியை சரி செய்த போது இருவர் பலி. மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் ஆகியோர் பலி.
6:56 AM, 5 Dec

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம்
6:51 AM, 5 Dec

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- வானிலை மையம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடா பகுதியில்நிலை கொண்டுள்ளது.
7:05 AM, 28 Nov

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது. மதுராந்தகம் ஏரிக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
11:24 PM, 27 Nov

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் உருவாகும். காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதிகளை நெருங்கும். டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நகரும் - இந்திய வானிலை மையம்
9:03 PM, 27 Nov

நிவர் புயலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு. புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. கால்நடைகளை இழந்தவர்களுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு
5:43 PM, 27 Nov

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 10ஆயிரம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல்.
5:10 PM, 27 Nov

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் 3 வரை மழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் - வானிலை மையம்.
2:31 PM, 27 Nov

நாகப்பட்டினத்தை நோக்கிச் செல்லும் புரேவி புயல்? மழையே இல்லாத டெல்டா மாவட்டங்களுக்கு பலனை கொடுக்குமா. நிவர் புயல் வடமாவட்டங்களின் தண்ணீர் பஞ்சத்தை சரி கட்டியது. அது போல் புரேவியும் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் டெல்டாவுக்கு நீர் ஆதாரத்தை அதிகரிக்குமா.
2:27 PM, 27 Nov

இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரி திறப்பு. பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு. பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
12:34 PM, 27 Nov

தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். டிச. 1 முதல் 3 வரை மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
11:24 AM, 27 Nov

திருவண்ணாமலை தண்டரை அணைக்கட்டில் இருந்து 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு. செய்யாறு ஆற்றில் உள்ள தண்டரை அணைக்கட்டில் இருந்து 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு. செய்யாறு பாயும் கரையோரம் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
11:23 AM, 27 Nov

வேகமாக நிரம்பி வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி ஏரி. உபரி நீர் வெளியேறுவதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
8:02 AM, 27 Nov

விருதுநகரில் திடீர் என பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம். பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக விருதுநகரில் மின்விநியோகம் நிறுத்தம்.
7:08 AM, 27 Nov

பாலாற்றில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 40 கிராமங்கள் வெள்ள அபாயம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. பாலாற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.
11:23 PM, 26 Nov

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம். ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் பாயும் வெள்ளம்
8:08 PM, 26 Nov

சென்னையில் கடுங்குளிர் வீசுகிறது. புயல் கரையை கடந்த நிலையில் காலை முதலே குளிர்ந்த காற்று வீசி வருகிறது. சென்னையின் பிற பகுதிகளில் மழை இல்லாத நிலையிலும் கடுங்குளிர் நிலவுகிறது. மலை பிரதேசங்களில் வசிப்பது போன்று உள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லா.
7:54 PM, 26 Nov

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்கிறது. அரை மணி நேரமாக கனமழை பெய்வதால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
7:10 PM, 26 Nov

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த அரைமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது
7:01 PM, 26 Nov

வேலூரில் 10 செ.மீ. மழை பதிவு. வேலூரில் கடந்த 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை. மழையே இல்லாத வேலூரில் கனமழையை கொடுத்த நிவர். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 10 செ.மீ. மழை பதிவு
7:01 PM, 26 Nov

வேலூர் பாலாற்றில் இருந்து காஞ்சிபுரம் பாலாற்றிற்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு. 10000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலாற்று கரையோரங்களில் இருக்கும் மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் எச்சரிக்கை
5:35 PM, 26 Nov

வேலூரில் மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
READ MORE

Flood
English summary
Cyclone Nivar live updates in Tamil: Heavy rain excepted for Tamilnadu including Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X