சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை - சென்னையில் மட்டும் 7 செ.மீ மழை பதிவு
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் மட்டும் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
வங்க கடலில் நிவர் புயல் இன்னும் சற்றுநேரத்தில் உருவாக உள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. தற்போதும் சென்னையில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் காலை 6 மணி நிலவரப்படி 7 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் கொட்டி தீர்க்கும் மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
நிவர் புயல்.. 7 மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்.. உச்சகட்ட அலெர்ட்!
சென்னை நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.