Just In
Cyclone Nivar: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிக கனமழை- வானிலை மையம்
சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் உருவாகி விட்டது! அடுத்து என்ன?
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது நிர்வர் புயலாக மாறியுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

புதுவையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நிவர் புயல் உருவானது.. வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மிகமிக கனமழை எச்சரிக்கை
இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிக கனமழை கொட்டும் என்கிறது சென்னை வானிலை மையம்.