சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Cyclone Nivar: சென்னை அருகே நிவர் புயல் ! இப்போது எவ்வளவு தூரம்? எவ்வளவு வேகத்தில் வருகிறது?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே 450 கிமீ தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப்பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரம் அடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Recommended Video

    Cyclone Nivar எங்கு உள்ளது? இந்திய வானிலை மையம் வெளியிட்ட Satellite புகைப்படம் | Oneindia Tamil

    சென்னையில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல் புதுவை, காரைக்கால், கடலூர் பகுதிகளில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. புயல் இன்று மாலை தீவிரம் அடைந்த உடன் மழையும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நிவர் புயல்- அவசர உதவி எண்கள்: மாநில எண்: 1070; மாவட்ட எண்:1077- முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?நிவர் புயல்- அவசர உதவி எண்கள்: மாநில எண்: 1070; மாவட்ட எண்:1077- முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

    எவ்வளவு தூரம்

    எவ்வளவு தூரம்

    வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில புயலாக இன்று காலை மாறியது. நிவர் புயல் மையம் சென்னைக்கு தென்கிழக்கே 450 கிமீ தொலைவில் இப்போது மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை புதுவை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

    இன்று கனமழை

    இன்று கனமழை

    இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால், பகுதிகளில் மிக கனமழை பெய்யும். இதேபோல் கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    உச்சகட்ட மழை

    உச்சகட்ட மழை

    புயல் நாளை கரையை கடப்பதால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக உச்சகட்ட மழை பெய்யும். இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மறறும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    பள்ளிகள் விடுமுறை

    பள்ளிகள் விடுமுறை

    நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.

    English summary
    Cyclone Nivar: The epicenter was reported at 450 km near Chennai. The Met Office has warned that the coastal areas of Tamil Nadu will gradually receive heavy rains due to this
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X