சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க ரெடி.. நிவர் புயலை எதிர்கொள்ள சிதம்பரம், கடலூர் விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 6 குழுக்கள், சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதிகளுக்கு விரைந்துள்ளன.

நாளை மறுநாள் புதன்கிழமை பிற்பகலில், மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அதி தீவிர புயலாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேக காற்றுடன் கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Cyclone Nivar: Six teams of NDRF leave for Cuddalore & Chidambaram towns

இந்த நிலையில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 6 குழுக்கள் சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதிகளுக்கு இன்று விரைந்துள்ளன. அவர்கள் அங்கு முன்கூட்டியே மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ஒரு குழுவில் 20 வீரர்கள் வீதம், 120 வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

Cyclone Nivar: Six teams of NDRF leave for Cuddalore & Chidambaram towns

புயல் கரையை கடக்கும்போது, பல்வேறு மாவட்டங்களிலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். இருப்பினும், வெள்ள பாதிப்பு, கட்டிட இடிபாடுகள் போன்ற பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால், பேரிடர் மீட்புப் படையின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே சென்று அங்குள்ள நிலவரங்களை மீட்பு படையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதனிடையே, சென்னையில் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

English summary
Tamil Nadu: Six teams of NDRF leave for Cuddalore & Chidambaram towns in Cuddalore Dist in the wake of cyclonic storm warning by IMD.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X