சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை சென்ட்ரல் அருகே பக்கிங்காம் கால்வாயில் பெருவெள்ளம்- பெரம்பூர் வரை மட்டும் ரயில்கள் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரம்பூர் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறி உள்ளன.

Cyclone Nivar: Southern Railway diverts Trains from Perambur Station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் அபாய அளவை தாண்டி வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கிவிட்டன.

இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதில் பெரம்பூர் வரை மட்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலுக்கு வரக் கூடிய மும்பை லோக்மான்ய திலக், பெங்களூர்- சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டக்கர், கோவை- சென்னை சென்ட்ரல், கோவை- சென்னை சென்ட்ரல் ஆகியவை பெரம்பூர் வரை மட்டும் இயக்கப்படும்.

Cyclone Nivar: Southern Railway diverts Trains from Perambur Station

இதேபோல் இன்று இரவு 11.30 மணிக்கு சென்ட்ரல் வழியாக இயக்கப்படக் கூடிய திருவனந்தபுரம்- கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரலுக்கு பதிலாக பெரம்பூர் வழியாக திருப்பிவிடப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம்ம் தெரிவித்துள்ளது. மேலும் பல ரயில்சேவைகளு ரத்து செய்யப்பட்டுள்ளன.

English summary
Southern Railway diverted Trains from Perambur Station ahead of Cyclone Nivar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X