சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 மாவட்டங்களில் "அதீத" கன மழை.. 7 மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் புயல் சுழன்றடிக்கும்- வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நாளை அதிகபட்சம் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    8 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் - வானிலை மையம் வார்னிங்

    வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    இன்று மதியம் நிலவரப்படி தொடர்ந்து மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் புயல் நிலை கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக இது ஒரு மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    பயமே வேணாம்.. ராத்திரி 11.30க்கு நாகை அருகே புயல் கரையை கடக்கும்.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார் பயமே வேணாம்.. ராத்திரி 11.30க்கு நாகை அருகே புயல் கரையை கடக்கும்.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார்

    மிக கன மழை

    மிக கன மழை

    அதுமட்டுமின்றி, நாளை மாலை புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியிலும் இன்று புயல் காரணமாக நல்ல மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    8 மாவட்டங்களில் அதீத கன மழை

    8 மாவட்டங்களில் அதீத கன மழை

    8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    110 கி.மீ வேகத்தில் காற்று

    110 கி.மீ வேகத்தில் காற்று

    மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

    இன்று அதீத கன மழை

    இன்று அதீத கன மழை

    நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதீத கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கடலூரில் இன்று மிக கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Cyclone Nivar cause maximum speed of 110 kilometer per hour wind in 7 districts, says Chennai meteorological department, and three districts will get very heavy rain on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X