சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Nivar: சென்னை தாம்பரத்தை நெருங்கும் புயலின் கண்.. சாட்டிலைட் வீடியோ சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: புயல் கரையை கடக்கும் போது அதன் கண் சென்னை- காஞ்சிபுரம் அருகே இருப்பதால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் என சாட்டிலைட் வீடியோ விளக்குகிறது.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைக் கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

இதற்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னை- காரைக்கால் இடையே அல்லது வேதாரண்யம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கஜா மாதிரி நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தாது.. மக்கள் பயப்பட வேண்டாம்.. சொல்கிறார் ஜெயக்குமார் கஜா மாதிரி நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தாது.. மக்கள் பயப்பட வேண்டாம்.. சொல்கிறார் ஜெயக்குமார்

புயல்

புயல்

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவித்தாற்போல் சென்னை- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கிறது. நாளை மாலை முதல் சென்னையை நோக்கி நகர்கிறது. பின்னர் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு 400 கி.மீ. தூரத்தில் இருக்கும் புயலானது மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மிக அதிக கனமழை

மிக அதிக கனமழை

இது சரியாக சென்னைக்கு மிக அருகே 200 கி.மீ., 150 கி.மீ. தூரம் என நகர்ந்து வருகிறது. சரியாக புயலின் கண்ணானது சென்னையை இரவு 10 மணிக்கு கடக்கிறது. இதனால் நாளை முதல் நாளை மறுநாள் நள்ளிரவு வரை மிக அதிக கனமழை இருக்கும்.

வேகம் குறைவு

வேகம் குறைவு

காற்றின் வேகம் அந்தளவுக்கு இருக்காது. இது வேகமாகவும் நகரவில்லை என்பதால் வர்தா ஏற்படுத்திய சேதத்தை இது ஏற்படுத்தாது என்றே தெரிகிறது. புயலின் கண் சென்னை- காஞ்சிபுரம் இடையே நகர்வதால் சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து எடுக்கும். தாம்பரம் பகுதிகளில் அதீத மழையை எதிர்பார்க்கலாம்.

மக்களே அச்சம் வேண்டாம்

மக்களே அச்சம் வேண்டாம்

இந்த புயலை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். இது சூப்பர் புயலாக மாறவும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் இதன் வேகம் மிகவும் குறைவு என்பதால் அது போன்ற அச்சம் வேண்டாம். வெள்ளம் குறித்த அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் நிம்மதியாக மழையை ரசிக்கலாம்.

English summary
Cyclone's eye will cross near Tambaram that led to heavy rainfall for those surrounding areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X