சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரபிக் கடலில் உருவாகுகிறது டவ்-தே புயல்.. தமிழகம், கேரளாவில் அதி கன மழைக்கு வாய்ப்பு #Cyclone

Google Oneindia Tamil News

சென்னை: அரபிக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே (Tauktae) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Recommended Video

    Cyclone Update | அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் TAUKTAE| Oneindia Tamil

    இதன் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று மற்றும் நாளை கனமழை மற்றும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    திமுகவுக்கு தாரை வார்க்கப்பட்ட 3 எம்பிக்கள்.. வைத்திலிங்கம், கேபி முனுசாமியின் ராஜினாமா பின்னணி! திமுகவுக்கு தாரை வார்க்கப்பட்ட 3 எம்பிக்கள்.. வைத்திலிங்கம், கேபி முனுசாமியின் ராஜினாமா பின்னணி!

    லட்சத்தீவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

     கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் நேற்று ஒரே நாளில் 28 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்கு பெரும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை மாவட்டத்தின் தெற்குப் பகுதிகள், தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அவ்வப்போது லேசான தூறல் காணப்படுகிறது. மற்றபடி, வானம் மேகமூட்டத்துடன் இருக்கிறது. அதேநேரம் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த பகுதி நிலை கொண்டுள்ளது, என்பதால் தெற்கு கேரள பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை கொட்டி வருகிறது.

    புயல் பெயர்

    புயல் பெயர்

    இந்த நிலையில்தான், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே (Tauktae) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் சின்னம் உருவான பிறகு கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயலுக்கு பெயர் சூட்டும் நாடுகள்

    புயலுக்கு பெயர் சூட்டும் நாடுகள்

    அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள் பெயர் சூட்டுகின்றன.

    பச்சோந்தி

    பச்சோந்தி

    அந்த வகையில் டவ்-தே புயலுக்கு மியான்மர் பெயர் சூட்டியுள்ளது. நேரத்திற்கும், இடத்திற்கும் தக்கவாறு நிறத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய பச்சோந்தி என்பது இதன் பொருள் என்கிறார்கள். எனவே பெயருக்கு ஏற்றால் போல இந்த புயல் கணிக்க முடியாததாக இருக்குமா, அல்லது எளிதாக கடந்து செல்லுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.

    English summary
    Low pressure area over Arabian Sea may turn into cyclone Tauktae on Saturday, says Chennai meteorological department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X