சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்?.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Cyclone Update | அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் TAUKTAE| Oneindia Tamil

    தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. நாளை இது புயலாக மாறும். இந்த டவ்-தே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 16ம் தேதி உருவாகும் இந்த புயல் 17ம் தேதி அதி தீவிர புயலாக அரபிக்கடலில் உருமாறும்.

    Cyclone Tayktae: Tamilnadu districts near the Western Ghats will get rain says, Tamilnadu Weatherman

    பாகிஸ்தான் அல்லது குஜராத் நோக்கி இந்த புயல் செல்ல வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Cyclone Tayktae: Tamilnadu districts near the Western Ghats will get rain says, Tamilnadu Weatherman

    இந்த நிலையில் இந்த புயல் காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திற்கும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வெதர்மேன் செய்துள்ள டிவிட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி மேகங்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் பக்கம் மழை பெய்யும்.

    காங்கேயம், தேவலா, கூடலூர், அவலாஞ்சி, மேல் பவானி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஆகிய பகுதிகளிலும் தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டி இருக்கும் பிற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Cyclone Tayktae: Tamilnadu districts near Western Ghats will get rain says Tamilnadu Weatherman in his tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X