சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்தமான் அருகே வங்கக் கடலில் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: அந்தமான் அருகே வங்கக் கடலில் 16-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Amphan cyclone : Tamilnadu Rain Update

    இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.15-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதியானது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும்.

    Cyclone will be formed in Andaman

    16ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும். வரும் 15-ஆம் தேதி கடலில் 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது போல் 16-ஆம் தேதி 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகம் வரை வீசும். 17ஆம் தேதி 65 கி.மீ. முதல் 75 கி.மீ வரை காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

    இதனால் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என தெரிகிறது. அதற்கான சாதகமான சூழல்கள் நிலவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி மூலம் தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரியில் கோடை மழை.. கத்திரி வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியடைந்த மக்கள்புதுச்சேரியில் கோடை மழை.. கத்திரி வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியடைந்த மக்கள்

    அதன்படி குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் கரூர், வேலூர், திருத்தணி, திருச்சி ஆகிய பகுதிகளில் வெயில் அதிகமாகவே உள்ளது.

    English summary
    Chennai Meteorological centre says Cylone will be formed on 16 th may in Andaman coastal area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X