சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிதீவிர நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்து வலுவிழந்தது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை: வங்க கடலில் உருவான அதிதீவிர நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் இரவு 10 மணி.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.30 மணிக்கு வலுகுறைந்த புயலாக கரையை கடந்தது.

அதிதீவிர நிவர் புயலானது முதலில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்- செய்யூர் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே கரையை கடக்கும். என கூறப்பட்டது. இந்த நிலையில் இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே கரையை கடக்க தொடங்கி அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது.

மரக்காணத்தில்

மரக்காணத்தில்

புயல் கரையை கடக்கும் போது மரக்காணத்தில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்து காற்றின் அழுத்தம் குறைவாக இருந்ததால் புதுவை அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்

எனினும் புயல் சரியாக எங்கே கரையை கடக்கும் என்பது அது நெருங்கும் போதுதான் தெரியும் என கூறினார்கள். இரவுக்கு மேல் கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. புயல் கரையை கடந்து 6 மணி நேரம் வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றது வானிலை மையம்.

மீனவர்கள்

மீனவர்கள்

மரக்காணத்தில் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கரைகளுக்கு வெளியே படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் காற்றின் காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் ஏற்படும் என மீனவர்கள் அஞ்சுகிறார்கள்.

காரைக்கால்- மாமல்லபுரம்

காரைக்கால்- மாமல்லபுரம்

புயல் கரையை நெருங்க நெருங்க கடலூர், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியது. பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே உள்ள நிலப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

அதிகாலையில் கரையை கடந்தது

அதிகாலையில் கரையை கடந்தது

புதுவை அருகே நிவர் புயல் கரையை இரவு 10.30 முதல் 11.30மணிக்குள் கரையை கடக்க தொடங்கியது. பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் கரையை கடந்து வலுவிழந்த புயலாக மாறியது நிவர். வடமேற்கு திசையில் ஆரணி, வேலூர் நோக்கி வலுவிழந்த நிலையில் சென்றது நிவர் புயல்.

English summary
Cyclone will landfall near Marakkanam , says Meteorological Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X