சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காக்கிநாடா அருகே பேய்ட்டி புயல் கரையைக் கடக்கும்.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பேய்ட்டி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்- வீடியோ

    சென்னை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே டிசம்பர் 17ம் தேதி பிற்பகலில் பேய்ட்டி புயல் கரையை கடக்கும் என்பதால் அது வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், பேய்ட்டி புயலாக வலுப்பெற்று ஆந்திரா காக்கிநாடா இடையில் டிசம்பர் 17-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கிறது.

     cyclonic storm phethai is set to bring heavy downpour in tamilnadu –IMD

    இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இயக்குநர், 17ம் தேதி வரை ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு சென்று சுமார் 690 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.

    24 மணி நேரத்தில் இது சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திரா, காக்கிநாடா இடையில் டிசம்பர் 17ம் தேதி பிற்பகலில் கரையை கடக்க கூடும்.

    அதன் காரணமாக டிசம்பர் 15 16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது வீசக்கூடும். மீனவர்கள் டிசம்பர் 17ம் தேதி ளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னையை பொருத்தவரை இன்று லேசான மழையும் நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.

    சென்னையில் பலத்த காற்று

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் எதிரொலியாக காசிமேடு பகுதியில் மீன்வளத்துறை சார்பில் புயல் எச்சரிக்கை மையம் திறக்கப் பட்டுள்ளது.

    English summary
    Odisha, Tamil Nadu, Andhra Pradesh on high alert as cyclonic storm 'Phethai' accompanied by heavy rains to intensify in next 24 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X