சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்கு

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க டி.ராஜா வழக்கு தொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்தி வைக்க ஹைகோர்ட்டில் மனு- வீடியோ

    சென்னை: திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் வழக்கு தொடர்ந்துள்ளது.

    திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன.

    மேலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக பொறுத்தவரை திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக கூறியதுடன், அதற்கான விருப்ப வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

    ஆதரவு தந்தது

    ஆதரவு தந்தது

    திமுகவும் தேர்தலுக்கு தயார் என்று சொன்னது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு திமுகவுக்கு பேராதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று அறிவித்ததுடன், அக்கட்சியின் மாநில செயலாளர்.முத்தரசன் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட்

    இந்திய கம்யூனிஸ்ட்

    ஆனால் கஜா புயல் நிவாரண நடவடிக்கைகள் திருவாரூர் தொகுதியில் நடந்து வருவதால் இடைத்தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

    டி.ராஜா மனு

    டி.ராஜா மனு

    இதன் அடிப்படையில், தற்போது இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி அக்கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா இது சம்பந்தமான மனுவினை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். மேலும் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    இதே காரணம்தான்

    இதே காரணம்தான்

    ஏற்கனவே அதிமுக தரப்பில் எம்பி தம்பிதுரையும் இதே காரணத்தை கூறிதான், தேர்தலை தள்ளி வைக்க சொன்னார். இப்போது, நேற்று திமுகவுக்கு ஆதரவு கொடுத்த இந்திய கம்யூனிஸ்ம் கட்சியும் இதே காரணத்தை சொல்லி, தேர்தலை தள்ளி வைக்க கோருகிறது.

    நிர்மல்ராஜ்

    நிர்மல்ராஜ்

    திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அம்மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நிர்மல் ராஜ் தெரிவித்த நிலையில், பிரதான கட்சிகளே இப்படி தேர்தலை தள்ளி வைக்க சொல்லி வழக்கு போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    CPI's National Secretary asks Election Commition to postpone Thiruvarur By Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X