சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் இதுதான் ... சுகாதாரத்துறை வெளியிட்ட முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ்க்கு (COVID-19 ) எதிராக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது- இன்று மாலை நிலவரப்படி கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வளவு பேர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் இருக்கும் ஒற்றுமை

    அந்த விவரங்களை அப்படியே பார்ப்போம் சென்னை, திருச்சி, மதுரை, மற்றும் கோவை ஆகிய விமான நிலையங்களில் இன்று வரை 2,10,538 பயணிகள் பரிசோதிக்கப்பட்டனர்.
    நேற்று வரை வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 90,541 பேர். இன்று வரை 10,814 பயணிகள் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதை முடித்துள்ளனர். இன்றைய தேதிவரை 90,824 பேர் 28 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

    Daily report on Public Health measures taken for COVID-19 in Tamil Nadu

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்த 127 பேர் அறிகுறியற்ற பயணிகள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1848 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 4,612 மாதிரிகள் பயணிகளிடமிருந்து எடுத்து அனுப்பப்பட்டுள்ளன.

    கிண்டியின் கிங் இன்ஸ்டிடியூட் சென்னை, தேசிய வைராலஜி நிறுவனம், புனே, தேனி வி.ஆர்.டி.எல், திருவாரூர் வி.ஆர்.டி.எல், திருநெல்வேலி வி.ஆர்.டி.எல், ஆர்.ஜி.ஜி.ஜி.எச் வி.டி.ஆர்.எல், கோயம்புத்தூர் வி.ஆர்.டி.எல், சேலம் வி.ஆர்.டி.எல், விழுப்புரம் வி.ஆர்.டி.எல், மதுரை வி.ஆர்.டி.எல், திருச்சி வி.ஆர்.டி.எல், நியூபெர்க் எர்லிச், சி.எம்.சி. வேலூர், ஒய்.ஆர்.ஜி சென்னை, மைக்ரோலாப்ஸ், கோவை, எஸ்.ஆர்.எம்.சி மற்றும் சென்னை அப்போலோ ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் 571 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,702 பேருக்கு கொரோனா இல்லை என்றுசோதனையில் தெரியவந்துள்ளது. 339 பேருக்கு சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

    தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு- பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு- பீலா ராஜேஷ்

    பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பயண ஆலோசனைகள். பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். தும்மல் மற்றும் இருமல் வரும் போது கைக்குட்டை / துண்டு பயன்படுத்தி முகத்தை மறைக்க வேண்டும். தண்ணீரில் அடிக்கடி கை கழுவுதல் செய்யுங்க

    • வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் எண்ணிக்கை 2,10,538
    • வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் நேற்று வரை இருந்தவர்கள் 90,541 பேர்
    • 28 நாட்கள் நிறைவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 10,814

    தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை

    • வீட்டு தனிமைப்படுத்தல்- 90,824
    • அரசின் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசதிகள் 127
    • தமிழகத்தில் செயல்படும் COVID -19 சோதனை வசதிகளின் எண்ணிக்கை 17 (11 அரசு +6 தனியார்)
    • மொத்தம் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4612
    • இன்று வரை 571 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
    • ஆய்வில் உள்ள ரத்த மாதிரிகளின் எண்ணிக்கை 339
    • தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் COVID-19 சந்தேக நபர்களின் எண்ணிக்கை
    • 1848
    • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8
    • டெல்லி மாநாட்டில் மொத்த நபர்கள் கலந்து கொண்டதால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1246
    • டெல்லி மாநாட்டிற்காக சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களின் மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 1246
    • டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மொத்தம் நேற்று வரை 437 பேருக்கு கொரோனா
    • டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இன்று நிலவரப்படி 85 பேருக்க கொரோனா
    • டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இன்று வரை 522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
    • தமிழகத்தில் உள்ள வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை 3,371
    • தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக தமிழகத்தில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 22,049

    English summary
    Daily report on Public Health measures taken for COVID-19 n Tamil Nadu . 571 persons are tested positive till date. 3,702 samples are tested negative.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X