சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெய்லிஹன்ட் சிஇஓ, தலைவருக்கு 2018ம் ஆண்டுக்கான, சாதனை விருது!

Google Oneindia Tamil News

Recommended Video

    டெய்லிஹன்ட் சிஇஓ, தலைவருக்கு 2018ம் ஆண்டுக்கான, சாதனை விருது!

    சென்னை: டெய்லிஹன்ட் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விரேந்திர குப்தா மற்றும் டெய்லிஹன்ட் தலைவர் உமங் பேடி ஆகியோருக்கு, எக்சேஞ்ச்4மீடியா அமைப்பின் இன்ப்ளூயன்சர் ஆப் தி இயர் விருது ('Influencer of the Year Award') வழங்கப்பட்டுள்ளது.

    2017ம் ஆண்டில் இந்த விருதை பெற்ற டபிள்யூபிபி, கன்ட்ரி மேலாளர், சிவிஎல் சீனிவாசன் மற்றும் 2016ம் ஆண்டு, இவ்விருதை பெற்ற, வியாகாம்18-ன் சி.ஓ.ஓ ராஜ்நாயக் ஆகியோர், இவ்வாண்டுக்கான விருதை, விரேந்திர குப்தா மற்றும் உமங்பேடிக்கு வழங்கினர்.

    Dailyhunt CEO, President awarded 2018 Influencer of the Year Award

    விழாவில் உமங்பேடி பேசுகையில், "இது மிகவும் சிறப்பான தொழில்முனைவு பயணமாகும். விரு மற்றும் நான் இருவருமே ஒருமித்த எண்ணங்களால் சகோதரர்களாக திகழ்கிறோம். இந்தியாவை அதன் அடிமட்ட அளவில் இருந்து அறிந்து வைத்துள்ளார் அவர். நான், பிசினஸ் அளவை புரிந்து வைத்துள்ளேன். இருவருமே எங்கள் திறமையளவில் இணைந்து செயல்படுகிறோம். வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு மூத்த சகோதரர் தேவை. என்னைப் பொறுத்தளவில், அவர் அந்த இடத்தில்தான் உள்ளார்" என்று தெரிவித்தார்.

    விரேந்திர குப்தா பேசுகையில், "டெய்லிஹன்ட் டீம் சார்பாக, நான் தாழ்மையோடு இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன். டிஜிட்டல் பிரிவுகளை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் முன்னணி நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவுக்கான நிறுவனங்களில் டெய்லிஹன்ட் ஒன்று என்பதால் பெருமிதம் அடைகிறோம். தற்போது மாதத்திற்கு 150 மில்லியன் ஆக்டிவ் பயனாளிகளை கொண்டுள்ளோம். அடுத்த ஆண்டு 300-350 மாதாந்திர ஆக்டிவ் பயனாளிகளை பெறுவோம். இந்த விருது என்பது எங்கள் மீதான உங்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது" என்றார்.

    ஒவ்வொரு ஆண்டும், எக்சேஞ்ச்4மீடியா சார்பில், தொழில்துறையை மாற்றியமைத்து, அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சியை கொண்டு செல்லும், முன்னோடிகளுக்கு கவுரவம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Virendra Gupta, Founder & CEO, Dailyhunt and Umang Bedi, President, Dailyhunt were awarded the exchange4media 'Influencer of the Year Award'.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X